உள்ளூர் செய்திகள்

கொரோனா சிறப்பு முகாம்

Published On 2022-09-05 08:22 GMT   |   Update On 2022-09-05 08:22 GMT
  • மதுரையில் கொரோனா சிறப்பு முகாம் நடந்தது. இதில் 56 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
  • பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டன.

மதுரை

தமிழகத்தில் கொரோனா பரவல் முற்றிலுமாக குறையவில்லை. மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று 1000-க்கும் மேற்பட்ட மையங்களில் சுகாதார ஊழியர்கள் தடுப்பு செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட்டன.

மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் டோஸ் 11 ஆயிரத்து 628, 2-வது டோஸ் 6 ஆயிரத்து 815, பூஸ்டர் 9 ஆயிரத்து 832 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 28 ஆயிரத்து 275 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் டோஸ் 472, 2-வது டோஸ் 14 ஆயிரத்து 501, பூஸ்டர் 11 ஆயிரத்து 880 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 26 ஆயிரத்து 853 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் முதல் டோஸ் 75, 2-வது டோஸ் 555, பூஸ்டர் 871 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 1501 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் முதல் டோஸ் 9, 2-வது டோஸ் 8, பூஸ்டர் 43 தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக 60 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் முதல் டோஸ் 12 ஆயிரத்து 184 பேருக்கும், 2-வது டோஸ் 21 ஆயிரத்து 879 பேருக்கும், பூஸ்டர் 22 ஆயிரத்து 626 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 56 ஆயிரத்து 689 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News