உள்ளூர் செய்திகள்

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீயணைக்கும் பணியில் 50 தீயணைப்பு வீரர்கள்

Published On 2023-07-01 06:36 GMT   |   Update On 2023-07-01 06:36 GMT
  • 3-வது நாளாக கடும் போராட்டம்
  • நாளைக்குள் தீயை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரிவிளை குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

நேற்று முன்தினம் மாலையில் குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கன்னியாகுமரியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

நேற்று 2-வது நாளாக தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலாக காட்சியளிக்கிறது.

இன்று 3-வது நாளாகவும் தீயணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாகர்கோவில், கன்னியா குமரி, குலசேகரம், திங்கள் நகர், தக்கலை, குளச்சல் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகிறார்கள். ஜே.சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து அதிக அளவு புகை வந்து கொண்டே இருப்ப தால் அந்த பகுதி மக்கள் கடும் ஆளாகி உள்ளனர்.

காற்று தென்கிழக்கு திசையில் வீசி வருவதால் குப்பை கிடங்கில் இருந்து வரும் புகை தென்கிழக்கு திசைக்கு செல்கிறது.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலங் கள் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். நாளைக்குள் தீயை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News