உள்ளூர் செய்திகள்

இன்று 134 வாகனங்கள் ஆய்வு - தகுதி இல்லாத பள்ளி வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை - கலெக்டர் அரவிந்த் தகவல்

Published On 2022-06-17 08:57 GMT   |   Update On 2022-06-17 08:57 GMT
  • நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது
  • பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர்கள் எச்சரிக்கையாக வாகனங்களை இயக்க வேண்டும்

நாகர்கோவில்:

பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது.

கோடை விடுமுறைக்குப் பிறகு தற்போது பள்ளி கள் திறக்கப் பட்டது. இதை யடுத்து இன்று நாகர்கோ வில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி வாகனங்கள் ஆய்வு நாகர்கோவில் கன்கார்டியா பள்ளியில் இன்று நடந்தது. இதையடுத்து இன்று காலை முதலே பள்ளிகளில் இருந்து வாகனங்கள் கன்கார்டியா பள்ளி மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இதை வட்டார போக்குவரத்து அதிகாரி சசி தலைமையில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு பணியை கலெக்டர் அரவிந்த் நேரில் வந்து பார்வையிட்டார். பள்ளி வாகனங்களில் உள்ள படிக்கட்டுகள் அவசரகால பாதைகள் இருக்கைகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டிரைவரின் இருக்கைகள் தனி கேபினில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதா என்பதையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதிகாலை தொடங்கிய ஆய்வு மாலை வரை நடந்தது.

ஆய்வின் போது ஒரு சில வாகனங்களில் சில குறைபாடுகள் இருந்தது தெரிய வந்தது.அந்த குறை பாடுகளை உடனடியாக சரிசெய்ய டிரைவர்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தி னர். ஆய்வின் போது தீ விபத்து ஏற்பட்டால் பள்ளி வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவி மூலம் தீயை எப்படி அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் டிரைவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி யதாவது:- பள்ளி வாகனம் ஓட்டும் டிரைவர்கள் எச்சரிக்கையாக வாகனங்களை இயக்க வேண்டும் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். வீடுகளிலிருந்து இருந்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும்போதும் சரி பள்ளிகளில் இருந்து மாணவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லும் போதும் சரி கவனமாக அழைத்து செல்ல வேண்டும். போக்குவரத்து விதிகளை கடைபிடித்து டிரைவர்கள் வாகனம் ஓட்ட வேண்டும்.

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.பள்ளியில் இருந்து அந்த வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.தற்போது 341 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.இதில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை, அவசர பாதை, படிக்கட்டு கள் உள்பட அனைத்தும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். தகுதி இல்லாத வாகனங்க ளின் உரிமைகள் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News