உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் நடந்தது.

திருப்பனந்தாளில், நாளை கடை அடைப்பு போராட்டம்

Published On 2022-09-19 10:25 GMT   |   Update On 2022-09-19 10:25 GMT
  • புகையிலை பொருட்கள் விற்காத 4 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
  • அந்த கடைகள் மீதான சீலை அகற்றி கடைகளை மீண்டும் திறக்க வைக்க வேண்டும்.

கும்பகோணம்:

திருப்பனந்தாளில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் திருப்பனந்தாள் பேரூரா ட்சி அனைத்து நல வணிகர் சங்கத்தின் தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், திருப்பனந்தாள் பேரூராட்சி செ.புதூர் கிராமத்தில் புகையிலை பொருட்கள் விற்காத 4 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதனால் அந்த கடைகளை நடத்தி வருபவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே அந்த கடைகள் மீதான சீலை அகற்றி கடைகளை மீண்டும் திறக்க வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (செவ்வாய்கிழமை) திருப்பனந்தாளில் கடையடைப்பு போராட்டமும், திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்தின் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News