உள்ளூர் செய்திகள்

திரவுபதி முர்முக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

Published On 2022-06-22 08:42 GMT   |   Update On 2022-06-22 08:42 GMT
  • பழங்குடியினத்தில் இருந்து முதன் முறையாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது.
  • பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்மு வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.

சென்னை:

த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை வேட்பாளராக நியமித்த பா.ஜ.க.-என்.டி.ஏ. கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.

இவர் இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி வேட்டபாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு பழங்குடியினத்தில் இருந்து முதன் முறையாக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. நன்கு படித்தவர், அரசியலிலும், அரசு நிர்வாகத்திலும், பொது வாழ்விலும் நிறைய அனுபவம் பெற்றவர்.

பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் திரவுபதி முர்மு வெற்றி பெற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News