உள்ளூர் செய்திகள்

வனத்துறையினர் யானையை ஆய்வு செய்த காட்சி.


சங்கர நாராயணசாமி கோவில் யானையை வனத்துறையினர் ஆய்வு

Published On 2022-07-17 08:59 GMT   |   Update On 2022-07-17 08:59 GMT
  • யானைக்கு என்ன மாதிரியான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது என பாகனிடம் கேட்டறிந்தனர்.
  • வன பாதுகாப்பு படை வனச்சரகர் செந்தில்வேல்முருகன் தலைமையிலான வனத்துறையினர் யானையை பரிசோதித்து ஆய்வு செய்தனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயணர்-கோமதி அம்பாள் கோவிலில் உள்ள 28 வயதான கோமதி யானையின் எடை, உயரம் உட்பட யானையின் வன பாதுகாப்பு படை வனச்சரகர் செந்தில்வேல்முருகன் தலைமையிலான மகேந்திரன், இளவரசி, வனக்காப்பாளர்கள் உட்பட வனத்துறையினர் பரிசோதித்து ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து யானைக்கு என்ன மாதிரியான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. நடை பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறதா, நாள் ஒன்றுக்கு எத்தனை முறை குளிக்க வைக்கப்படுகிறது போன்றவைகளை யானைப்பாகனிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து இதே போல் சரியான முறையில் பராமரித்து வர தெரிவித்தனர்.

Tags:    

Similar News