உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-07 08:56 GMT   |   Update On 2022-10-07 08:56 GMT
  • விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கால்வாய் முழுவதும் கழிவு பொருட்களும் தேங்கி கிடக்கிறது.

நெல்லை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மேலப்பாளையம்- பாளை தாலுகா நிர்வாகிகள், விவசாயிகள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மாநகர பகுதியில் உள்ள ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் நெல்லை, பாளையங்கால்வாய் மூலம் பயன்பெற்று வருகிறது. குறிப்பாக பாளை, மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் பாளையங் கால்வாயை நம்பி உள்ளது. ஆனால் தற்போது கால்வாய் முழுவதும் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மேலும் கழிவு பொருட்களும் தேங்கி கிடக்கிறது.

இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. அப்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்கும்போது முழுமையாக பாளையங்கால்வாயில் தண்ணீர் வரமுடியாத நிலை ஏற்படும். எனவே பருவமழைக்கு முன்பாக பாளையங்கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News