உள்ளூர் செய்திகள்

அன்பழகன் எம்.எல்.ஏ.

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது உறுதி- எம்.எல்.ஏ. தகவல்

Published On 2022-07-25 10:03 GMT   |   Update On 2022-07-25 10:03 GMT
  • படகு சவாரி திட்டம் தயார் நிலையில் இருந்தாலும், ஆகம விதிகளின்படி அது ஏற்புடையதாக இல்லை.
  • மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கும்பகோணத்துக்கு ரூ.1,100 கோடியில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் நகரங்க ளுக்கானதூய்மை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மகாமக குளத்தில் ஒருங்கி ணைந்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவ ணன் தலைமை தாங்கினார். ஆணையர் செந்தில் முருகன், துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்பழகன் எம்.எல்.ஏ. தூய்மை பணியை தொடங்கி வைத்தார். நகர் நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோரின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் மகாமக குளத்தின் 4 கரைகளிலும் தூய்மை பணி மேற்கொண்டனர்.

தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. கூறும்போது:- கும்பகோணத்தின் ஆன்மிகச் சின்னமாகவும் மகாமக குளம் விளங்குகிறது. இதில் படகு சவாரி திட்டம் தயார் நிலையில் இருந்தாலும், ஆகம விதிகளின்படி அது ஏற்புடையதாகஇல்லை என்ற கருத்தின் படி படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கும்பகோ ணத்துக்கு ரூ.1,100 கோடி யில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கும்பகோ ணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது உறுதி. அதன் பிறகு கும்பகோணம் மாந கரம் புதுப்பொலிவு பெற்று முன்னணி மாநகரங்களில் ஒன்றாக திகழும் என்றார்.

Tags:    

Similar News