உள்ளூர் செய்திகள்

சிவகிரி நீதிமன்றத்தில் கலந்தாய்வு கூட்டம்

Published On 2022-07-27 09:02 GMT   |   Update On 2022-07-27 09:02 GMT
  • சிவகிரியில் 13-ந் தேதி லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
  • கூட்டத்துக்கு சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கினார்.

சிவகிரி:

சிவகிரி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வருகிற 13-ந் தேதி லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் மற்றும் போலீஸ் நிலைய வழக்குகள், வருவாய்த்துறை வழக்குகள் போன்றவை தொடர்பான வழக்குகள் சம்பந்தமாக சமரச தீர்வுகாண கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், சிவகிரி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கினார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், கடையநல்லூர் மண்டல துணை தாசில்தார் கணேசன், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், வாசுதேவநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், புளியங்குடி சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் மேனன், நீதிமன்ற தலைமை எழுத்தர் கலாமணி, நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News