உள்ளூர் செய்திகள்

திண்டிவனத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திண்டிவனத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலா? போலீசார் அதிரடி சோதனை

Published On 2022-09-25 07:14 GMT   |   Update On 2022-09-25 07:14 GMT
  • வீடுகளில் பெட்ரோல் நிரப்பிய பைகளை மர்ம கும்பல் வீசி சென்றனர்.
  • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விழுப்புரம்:

கோவையில் பா.ஜனதா அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். மேலும் பொள்ளாச்சியிலும் பல்வேறு இடங்களில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.பா.ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் நிரப்பிய பைகளை மர்ம கும்பல் வீசி சென்றனர். இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கை யாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள், பா.ஜனதா தலைவர்கள் வீடுகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் ெரயில் நிலையங்கள், கோவில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் முன்பும் தலைவர்கள் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களி லும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார்மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தீவிர வாகன சோத னையில் ஈடுபட்டனர். அதன்படி திண்டிவனம் நேரு வீதி நவாப் மஜித் அருகே விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில் போலீசார் திடீரென தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.வாகன சோதனையில் பயங்கரவாதிகள் ஏதேனும் ஊடுருவி உள்ளார்களா? அல்லது பயங்கர ஆயுதங்களுடன் சந்தேகப்படும் படியான நபர்கள் யாரேனும் வருகிறார்களா? என போலீசார் வாகனங்களில் சோதனை நடத்தினர். திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா, திண்டிவனம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சீனிபாபு மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News