உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே தொழிலாளி மீது வெந்நீர் ஊற்றி தாக்குதல்

Published On 2022-07-07 09:10 GMT   |   Update On 2022-07-07 09:10 GMT
  • பாக்கியராஜ் கீழ உப்பூரணி கிறிஸ்தவ ஆலயம் அருகே நின்று கொண்டு அன்பையாவை அவதூறாக பேசிக் கொண்டிருந்தார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் பாக்கியராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழ உப்பூரணி மேலத்தெருவை சேர்ந்தவர் குமார் என்ற வண்டிக்குமார் (வயது 41). தொழிலாளி.

தகராறு

இவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த பாக்கியராஜ் (38) என்பவருக்கும், அன்பையா என்பவருக்கும் இடத்தகராறு இருந்து வருகிறது.

சம்பவத்தன்று பாக்கியராஜ் கீழ உப்பூரணி கிறிஸ்தவ ஆலயம் அருகே நின்று கொண்டு அன்பையாவை அவதூறாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குமார் பொது இடத்தில் அவதூறாக பேசலாமா என தட்டிக் கேட்டார்.

வெந்நீர் ஊற்றினார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பாக்கியராஜ், குமாரை அவதூறாக பேசி, மாரியம்மாள் என்பவர் வீட்டில் மாடுகளுக்கு கஞ்சி தயார் செய்ய வைக்கப்பட்டிருந்த வெந்நீரை எடுத்து, குமார் மீது ஊற்றினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.

இதனால் காயம் அடைந்த குமார் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் பாக்கியராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

Tags:    

Similar News