உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அரசு பள்ளியில் 506 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிளை அமைச்சர் பொன்முடி வழங்கினார். அருகில் கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் உள்ளனர்.

திருவெண்ணைநல்லூர் அரசு பள்ளியில் 506 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

Published On 2022-08-02 08:53 GMT   |   Update On 2022-08-02 08:53 GMT
  • திருவெண்ணைநல்லூர் அரசு பள்ளியில் 506 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் பொன்முடி அவர்களால் வழங்கப்பட்டது.
  • திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம்கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா வரவேற்றார். நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு திருவெண்ணைநல்லூர், முகையூர் ஒன்றியங்களைச் சார்ந்த 15 அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பில் 2 ஆயிரத்து 506 இலவச சைக்கிள் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், திருவெண்ணைநல்லூர் ஒன்றிய குழு தலைவர் ஓம்சிவசக்திவேல், முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி, பேரூராட்சி துணை தலைவர் ஜோதி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் கோமதி நிர்மல்ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலிபேக், தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், நகர தலைவர் செந்தில்முருகன், முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெங்கடாஜலபதி, தேவிசெந்தில், ஷீபாராணி ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News