உள்ளூர் செய்திகள்

32-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம்

Published On 2022-07-23 10:22 GMT   |   Update On 2022-07-23 10:22 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் நாளை 32-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற உள்ளது.
  • இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்க ளுக்கு 15 லட்சத்து 15 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 13 லட்சத்து 10 ஆயிரத்து 72 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி யும் 10 லட்சத்து 62 ஆயிரத்து 524 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. சதவீத அடிப்படையில் முதல் தவணை தடுப்பூசி 86.47 சதவீதம்பேரும், 2-ம் தவணை தடுப்பூசி 70.13 சதவீதம் பேரும் போட்டுள்ளனர்.

இன்னும் 2 லட்சத்து 4 ஆயிரத்து 928 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும்ம், 2 லட்சத்து 47 ஆயிரத்து 548 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 31 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 8,93,463 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதேபோல் நாளை( ஞாயிற்றுக்கிழமை) 32-ம் கட்டமாக 2766 முகாம்கள் மூலமாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனாநோய் "சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது. இம்முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.சுமார் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசிகூட போடாதவர்களும் முதல் தவணை தடுப்பூசி போட்டு முடித்து 2-ம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஊக்குவிப்பு தடுப்பூசியாக 3-ம் தவணை தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

Similar News