உள்ளூர் செய்திகள்
.

சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் டெம்போ டிரைவரை மிரட்டி பணம் பறித்த கும்பல்

Published On 2022-05-27 13:15 GMT   |   Update On 2022-05-27 13:15 GMT
சேலம்-நாமக்கல் நெடுஞ்சாலையில் டெம்போ டிரைவரை மிரட்டி பணம் பறித்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
சேலம்:

கரூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் நேற்றிரவு ஒகேனக்கல்லுக்கு காரில் புறப்பட்டனர். அந்த கார் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப் போது முன்னால் சென்று கொண்டிருந்த டெம்போ கார் மீது உரசியதாக கூறி அதனை வழி மறித்தனர். 

பின்னர் காரில் இருந்த 5 பேர் கும்பல் டெம்போ டிரைவரிடம் ரூ.10 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறிய நிலையில் அவரிடம் இருந்து 1000 ரூபாயை பறித்து விட்டு சேலம் நோக்கி காரில் வந்தனர்.

இதனையறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசாருக்கு தெரிவித்தனர். சீலநாயக்கன்பட்டியில் காரை போலிசார் மறித்த போது கார் அங்கிருந்த மின்னல் வேகத்தில் பெங்களுரு சாலையில் சென்றது. இதையடுத்து போலீசார் காரை துரத்தி சென்றனர். 

மேலும் மைக்கிலும் அறிவித்து ரோந்து போலீசாரை உசார்படுத்தினர்.  ஆனால் அதற்குள்  கார் குரங்குசாவடியை தாண்டி சென்றது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஒரு சந்திற்குள்  காரை  ஒதுக்கி நிறுத்தி வைத்தனர். அததனை கவனித்த ரோந்து போலீசார் போலீசாருக்கு  தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காரை மடக்கி பிடித்து காருக்குள்  இருந்த 5 பேரையும் அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் புதுச்சத்திரம்  போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கும்பலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News