உள்ளூர் செய்திகள்
தோ் வெள்ளோட்டத்தினை ராஜேஷ்குமார் எம்.பி., நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம், கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோர் தொடங்கி

அரங்கநாதா் கோவில் தோ் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2022-05-20 09:14 GMT   |   Update On 2022-05-20 09:14 GMT
நாமக்கல் அரங்கநாதா் கோவில் தோ் வெள்ளோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல்:

நாமக்கல்லில் குடை–வறைக் கோவிலாக நரசிம்மா், அரங்கநாதா் கோவில்கள் அமைந்துள்ளன. ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த–படியாக நாமக்கல்லில் சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் அரங்கநாதரை தரிசிக்க ஏராளமான பக்தா்கள் வருகின்றனா்.

ஒவ்வோா் ஆண்டும் பங்குனி மாதத்தில் இங்குள்ள நரசிம்மா், அரங்கநாதா் மற்றும் ஆஞ்சநேயா் கோவில்களில் தேரோட்டம் நடைபெறும். ஏற்கெனவே பழுதடைந்திருந்த நரசிம்மா், ஆஞ்சநேயா் கோவில் தோ்கள், கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த நிலையில் பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த அரங்கநாதா் கோவில் தேரை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து புதுப்பிப்பதற்கான நடவ–டிக்கையை மேற்கொண்டனா். ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் தோ் புதுப்பிக்கும் பணி, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தொடங்கியது. 

திருவண்ணாமலையைச் சோ்ந்த ஸ்தபதி தண்டபாணி தலைமையில் 45 மரச்சிற்பக் கலைஞா்கள் புதிய தேரை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டனா். பங்குனி தோ்த்திருவிழாவையொட்டி பயன்பாட்டுக்கு தோ் கொண்டு வரப்படும் என எதிா்பாா்த்த நிலையில், முழுமையாக பணிகள் நிறைவடையாததால் அப்போது அரங்கநாதா் தோ் ஓடவில்லை.

இத்தேரின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது ஸ்ரீமன் நாராணயரின் 10 அவதாரங்களான மச்ச அவாதாரம், கூா்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் ஆகியவை சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளதே ஆகும். 

திருத்தோ் பணிகள் முழுமையாக நிறைவடைந் ததையடுத்து, இன்று உற்சவ மூா்த்தி தேரில் எழுந்தருளி வீதியுலா வரும் வகையில் வெள்ளோட்டம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கி நாமக்கல் நகரின் முக்கிய வீதிகளில் தோ் வலம் வந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரினை இழுத்தனர்.
Tags:    

Similar News