உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

மங்கலத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-18 10:12 GMT   |   Update On 2022-05-18 10:12 GMT
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், இஹ்ஸானுல்லாஹ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்
மங்கலம்:

கியான் வாபி மஸ்ஜிதுக்கு சீல் வைத்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை கண்டித்தும், வழிபாட்டுத்தலங்கள் சட்டப்பிரிவு 1991-ஐ அமல்படுத்தக் கோரியும் நேற்று (செவ்வாய்) மங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ-கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மன்சூர் அஹமத் முன்னிலை வகித்தார். எஸ்.டி.பி.ஐ., கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் ஹக்கீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது இஸ்மாயில், இஹ்ஸானுல்லாஹ்  ஆகியோர் கண்டன உரையாற்றினார், மாவட்ட துணைத் தலைவர் முஜிபுர் ரகுமான், எஸ்.டி.டி.யு ., தொழிற்சங்க திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா திருப்பூர் மாவட்ட செயலாளர் முகமது ரபிக், மங்கலம் ஊராட்சி மன்ற 6-வது வார்டு உறுப்பினர் ராபியத்துல் பஸ்ரி மற்றும் விமன்ஸ் இந்தியா மூமண்ட்-அமைப்பின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சஹானா ஆகியோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் தொகுதி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் நன்றியுரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கியான் வாபி மஸ்ஜித்-க்கு சீல் வைத்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Tags:    

Similar News