உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

கல்குவாரி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் திரளானோர் மனு

Published On 2022-05-17 09:46 GMT   |   Update On 2022-05-17 09:46 GMT
முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரி விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் திரளானோர் மனு அளித்தனர்.
நெல்லை:

தமிழர் உரிமை மீட்பு களத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையில் இன்று ஏராளமானோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு பேரணியாக திரண்டு வந்து நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் குவாரியில் 6 அப்பாவி தொழிலாளர்கள் சிக்கினர். இதில் இன்னும் 2 பேரின் நிலைமை என்ன என்று தெரியாத நிலை உள்ளது.

இந்த சட்டவிரோத குவாரிகள் இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ. 50 லட்சமும், குவாரி உரிமையாளர் சார்பில் தலா ரூ. 50 லட்சமும் என மொத்தம் ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

காயமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கல்குவாரி உரிமையாளர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

 கல்குவாரி அனுமதி வழங்கிய கனிமவளத் துறை அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் சுடலை ராஜ், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் மாரியப்பன் பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் துரைப்பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News