என் மலர்
நீங்கள் தேடியது "Quarry"
- தென்காசி அருகே உள்ள பாட்டாகுறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12-ந் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் உயிரிழந்துள்ளார்.
- விபத்து நடந்த இந்த குவாரியில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கா மலும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதும் விபத்திற்கு காரணங்களாக அமைந்துள்ளன.
தென்காசி:
முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்ப தாவது:-
தென்காசி அருகே உள்ள பாட்டாகுறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12-ந் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்த இந்த குவாரியில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கா மலும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியதும் விபத்திற்கு காரணங்களாக அமைந்துள்ளன.
மேலும் அங்கே விதிகளை மீறி அதிக அளவு ஆழத்தில் துளையிட்டு சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வெடித்ததால் தான் நில அதிர்வு ஏற்பட்டு உயரமான பகுதியில் இருந்து பாறை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக காவல்துறை தற்செயல் விபத்து மரணம் என்ற 174- வது பிரிவின் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளது.
விதிமுறைகளை பின்பற்றாத அந்த குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து குவாரி இயங்குவதை தடை செய்ய வேண்டும்.
விபத்தில் பலியான பரமசிவம் குடும்பத்திற்கு அரசு தரப்பில் உரிய நஷ்ட ஈடு வழங்குவதுடன் தொழிலாளர் நலச் சட்டப்படி குவாரி உரிமையாள ரிடமிருந்து குறைந்தபட்சம் 50 லட்சம் ரூபாய் பெற்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து நடந்த குவாரியில் கனிமவளத்துறை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஒளிவு மறைவற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குவாரிகள் இதுபோல ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், உப்பு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
- அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே தலைச்சங்காடு ஊராட்சி ராஜேந்திரன் வாய்க்காலையொட்டி சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் புதிதாக மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக அரசு விதிமுறைகளை மீறி சுமார் 15 அடி ஆழத்திற்கு மேல் மணலை அள்ளி தனியார் செங்கல் சூளைக்குக்கும் தனியாருக்கும் விற்பனைக்கும் அனுப்பப்படுவதாகவும், விதிமுறைகளை மீறி அதிக ஆழத்தில் மணலை அள்ளுவதால் சுற்றியுள்ள மேலப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, குரங்குபுத்தூர், கருவி, பூந்தாழை உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், உப்பு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மணல் குவாரியை முற்றுகையிட்டு, அங்கிருந்து மணல் ஏற்றிவந்த லாரியை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். நிலத்தடிநீர் உப்பு நீராவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர் இமயம் சங்கர், கிளைச் செயலாளர் வீரகுமார், பொறுப்பாளர் விஜயபாலன், திமுக கிளை செயலாளர் பாலபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் மேற்படி இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு விலகி சென்றனர். மீண்டும் மணல் எடுத்ததால் ஆக்கூர் முக்கூட்டு வழயாக வந்த லாரிகளை மறித்து போராட்டம் நடைபெற்றது. மணல் குவாரிகளை வலியுறுத்தப்பட்டது.
- கல்-மண் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- குவாரிகளால் ஏற்படும் தூசி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள தூம்பக்குளம் பகுதியில் புதிதாக கல்-மண் குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்குவாரி அமைய உள்ள இடத்தை சுற்றிழும் 400 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அருகில் உள்ள முனியாண்டிபுரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தூம்பக்குளத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கல்-மண் குவாரி அமைத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைவார்கள். வெடி வைத்து கற்களை உடைக்கும்போது அங்கு வசிக்கும் விவசாய குடும்பங்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். குவாரிகளால் ஏற்படும் தூசி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் குவாரிகள் அமைக்க கூடாது என பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
- புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு, ஜூலை. 5-
சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி உள்ளது. இதன் அருகே ஓசூர் கிராமம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
வருவாய் துறைக்கு சொந்தமான இந்த கல்குவாரியின் உரிமம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் காலாவதியானது. இதனால் குவாரியை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்துள்ளது.
பல வருடங்களாக குவிந்துள்ள கற்குவியல்களில் செடி, கொடி வளர்ந்து புதர் நிறைந்து காடு போன்று காட்சியளிக்கிறது.
இந்நிலையில் ஒரு சிறுத்தை இந்த கல்குவாரியில் தஞ்சம் புகுந்து கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் புகுந்த ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வந்தன.
தொடர்ந்து போக்கு காட்டி வந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டு வைத்து கடந்த மாதம் 30-ந் தேதி சிறுத்தையை பிடித்தனர்.
பின்னர் சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. இதை அடுத்தே அப்பகுதி மக்கள், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.
இருந்தாலும் மீண்டும் கல்குவாரியில் வேறு ஏதாவது வன விலங்குகள் பதுங்கி மீண்டும் அச்சுறுத்தக் கூடாது என பயந்து வருகின்றனர்.
இது குறித்த அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இந்த செயல்படாத கல்குவாரி 1.25 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளது. ஆனால் இதனை சுற்றியுள்ள பட்டா நிலங்களில் கற்கள் மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் தரிசு இடத்தில் விவசாயம் செய்ய முடிவதில்லை.
புதர் மண்டி கிடப்பதால் மீண்டும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் புகும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் இந்த கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர இந்த பகுதியில் உள்ள புதர்களை அகற்றி சுத்தமாக வைத்திருந்தால் வனவிலங்குகள் ஊருக்குள் வராது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






