உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நாகர்கோவிலில் பட்டா பெயர் மாற்றத்திக்கான நில அளவை ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் : கலெக்டர் அரவிந்த்

Published On 2022-05-17 06:58 GMT   |   Update On 2022-05-17 06:58 GMT
நாகர்கோவிலில் பட்டா பெயர் மாற்றத்திக்கான நில அளவை ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அகஸ்தீஸ்வரம் தாலுகா நாகர்கோவில் வடக்கு (1), வடசேரி கிழக்கு (2), வடிவீஸ்வரம் வடக்கு (3), வடிவீஸ்வரம் தெற்கு (4), நாகர்கோவில் தெற்கு (5), வடசேரி மேற்கு (6), வடசேரி தெற்கு (7), நீண்ட கரை ‘ஏ’ கிழக்கு (8) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதியில் நிகர நில அளவை பணிகள் முடிந்து, நிலவரி திட்ட தொடர் பணிகள் நடந்து வருகின்றன. 

இதில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புலத்தில் நேரடியாக விசாரணை பணிகள் செய்து, பட்டா பெயர் பதிவு மாற்றம் மற்றும் உட்பிரிவு பதிவு மாற்றம் மேற்கொள்ளப்படு கிறது. இதற்கான தனி தாசில்தார் அலகு-1-க்குட்பட்ட புதிய சர்வே வார்டுகளான ‘ஏ’ முதல் ‘இ’ வரையிலான பகுதிகளில் (மொத்தம் 117 பிளாக்குகள்) ஏப்ரல் மாதத் துடன் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது இணைய வழிப்படுத்துதல் பணிகள் நடந்து வருகின்றன.

எனவே இந்த நகர நில அளவை பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் இதுவரை இத்திட்டத்தின் கீழ் பயன் அடையாதவர்கள், தங்கள் உரிமையை நிலை நாட்டத்தக்க ஆவணங்களுடன், தனி தாசில்தார், நகர நிலவரி திட்ட அலகு 1, நாகர்கோவில் (இருப்பு அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலக 2-ம் தளம், கலெக்டர் அலுவலக வளாகம்) என்ற அலுவலரை உடனடியாக தொடர்பு கொண்டு பட்டா பெயர் மற்றும் உட்பிரிவு பதிவு மாற்றங்களை பெற்று பயனடையலாம். 

மேலும் மற்ற நகர நில அளவை புதிய வார்டுகளான ‘எப்’ முதல் ‘எஸ்’ வரையிலான பகுதிகளுக்குட்பட்ட பொது மக்களும் இல்லம் தேடி வரும் நில அளவை பணியாளர்கள் வழங்கும் படிவத்தை பெற்று, ஆவணங்களை சமர்ப்பித்து பயன் அடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார். 
Tags:    

Similar News