உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம்

சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-05-14 09:59 GMT
திருமங்கலம் அருகே சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
திருமங்கலம்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில்,  பழமை வாய்ந்த சக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 

முன்னதாக 3 நாட்கள் கிராம மக்கள்கா ப்புக்கட்டி விரதம் இருந்து விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையிலும், குழந்தை பாக்கியம் வேண்டியும் வழிபட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். 

இதனை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி, பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றது . 2-ம் கால யாக பூஜை, கோபூஜை, ஜெப பாராயணம்  நடைபெற்று ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. 

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருமங்கலம் யூனியன் சேர்மன் லதா ஜெகன் கீழக்கோட்டை பஞ்சாயத்து தலைவர் தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை லட்சுமிபுரம் நாட்டாமை ராமர், துரைசின்னன், கருப்பையா, ராம்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News