உள்ளூர் செய்திகள்
மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோரிடம் மனு கொடுத்த நடைபாதை வியாபாரிகள்.

நெல்லை மேயரிடம் சாலையோர வியாபாரிகள் மனு

Published On 2022-05-10 09:57 GMT   |   Update On 2022-05-10 09:57 GMT
கடைகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் நெல்லை மேயர் சரவணன் மற்றும் துணை மேயர் கே.ஆர்.ராஜூவிடம் மனு கொடுத்தனர்.
நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேயர் சரவணன், துைணமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்.

பாளை சீனிவாசநகர், தென்றல்நகர் குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில் புறநகருக்கு செல்லும் பஸ்கள் எங்கள் பகுதியில் நின்று செல்வதில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

டவுன் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில், வடக்கு ரதவீதியில் சாலையோரம் கடைகளை வைத்து  நாங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்களுக்கு பல்வேறு இடையூறுகள் வருகிறது.

எனவே தொடந்து கடைகளை நடத்த எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

20-வது வார்டுக்குட்பட்ட ஆதம்நகர் பொதுமக்கள் கவுன்சிலர் ஷேக்மன்சூர் தலைமையில் கொடுத்த மனுவில் ஆதம்நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் பொழுது போக்கு பூங்காக்கள் அமைக்கப்படவில்லை. எனவே சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
Tags:    

Similar News