search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchants"

    • வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும்.
    • வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கொடியேற்று விழா நடந்தது. நகரத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளர் கனகராஜ், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், துணைச் செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவத் தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் சங்க கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் கடைவீதி பகுதிக்கு மேள தாளங்கள் முழங்க நடை பயணமாக சென்று பேசினார்.

    ஆன்லைன் வர்த்தகம் வணிகர்களை பெரிதும் பாதிக்கிறது. உணவு பாதுகாப்பு துறை வியாபாரிகளை மிரட்டினால் அவர்களை வீட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். வியாபாரிகளும் தரமான பொருட்களை வாங்கி விற்க வேண்டும். காய்கறிகளின் விலைகள் ஏறாமல் தடுக்க குளிர் பதனக்கிடங்குகளை அரசு அமைத்து, காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படும் நேரத்தில் அரசே விலை நிர்ணயம் செய்து மக்களுக்கு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வணிகர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். வணிகர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணலி வணிகர் சங்க ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில் சங்க நிதி குழு தலைவர் சந்தனா என். சேகர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வடசென்னை வடக்கு மாவட்ட பொருளாளர் ராஜா சங்கர், நிதிக்குழு செயலாளர் சமுத்திர பாண்டியன், பொருளாளர் எஸ். எஸ். காட்வின், செயலாளர்கள் கருணாமூர்த்தி, ராஜேஷ், வேதா, துணை தலைவர் ராதாகிருஷ்ணன், முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க பொது செயலாளர் மணலி என். மாரிமுத்து தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் ஏ. எம். விக்ரம ராஜாவின் கோரிக்கையை ஏற்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 50 ஆயிரத்துக்குட்பட்ட நிலுவை வரிகளை அடியோடு ரத்து செய்தும் அதற்கு மேல் உள்ள நிலுவை வரியினை எந்தவித அபராதமும் இன்றி, 50 சதவீதம் கட்டினால் போதும் என்று ஆணை பிறப்பித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வணிகர் சங்க இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலை கணேஷ், கனிராஜன், வேல்முருகன், சூர்யா, சரவணன், தேவேந்திரன் மற்றும் மகளிர் அணி தலைவி சுபத்ரா, மணலி தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உரிமமின்றி பால் பொட்டலங்கள் விற்ற வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளில் பால் வியாபாரிகள் தரமற்ற எடை அளவைகளை உபயோகப்படுத்துவதாக தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிசெல்வி தலைமையில், தொழிலாளர் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 21-ந் தேதி ராஜபாளையம் பகுதிகளில் உள்ள பஞ்சு மார்க்கெட், ரெயில்வே பீடர் ரோடு பகுதிகளிலும், 24-ந்தேதி சூலக்கரை, முத்துராம்பட்டி அல்லம்பட்டி, பாண்டியன் நகர், மல்லாங்கிணறு ரோடு பகுதிகளிலும் கூட்டாய்வு செய்தனர்.

    இந்தக் கூட்டாய்வில் விருதுநகர் தொழிலாளர் துணை ஆய்வர் சதாசிவம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் உதவி ஆய்வர்கள் தயாநிதி, துர்கா, பிச்சைக் கனி ஆகியோர் ஈடுபட்டனர். இதில் எடையளவுகளை

    உரிய காலத்தில் பரிசீலனை செய்து முத்திரையிடாமல் வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தி வந்த ஒரு வணிகர் மீதும், எடை அளவுகள் மறுமுத்திரையிடப்பட்ட தற்கான சான்றினை நுகர்வோர் பார்க்கும் வண்ணம் வெளிக்காட்டி வைக்காத 1 வணிகர் மீதும், 2009-ம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் சட்டமுறை எடையளவு. (பொட்டலப் பொருட்கள்) விதிகளின் கீழ் உரிமம் பெறாமல் பால் பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்ததாக ஒரு வணிகர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.

    மேலும் மறுமுத்திரையிடப்படாத 18 ஊற்றல் அளவைகள் பொதுப் பறிமுதல் செய்யப்பட்டது. ஊற்றல் அளவைகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்திரையிடப்பட வேண்டும். எடை அளவுகளை உரிய காலத்தில் முத்திரையிடாமல் பயன்படுத்தும் வணிகர்களுக்கு, 2009ஆம் வருட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முதலாம். குற்றச்சாட்டிற்கு ரூ.25,000/-வரை அபராதமும், இரண்டாம் மற்றும் அதற்கு அடுத்த சூற்றங்களுக்கு 6 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் நீதிமன்றத்தின் மூலம் விதிக்க வழிவகை உள்ளது.

    நுகர்வோர்கள் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562-225130 என்ற தொலைபேசி எண்ணிலோ, தொழிலாளர் உதவி ஆணையர், 1/13 சி, ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக கட்டிடம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியில் அஞ்சல் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

    இந்தத் தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • சங்க உறுப்பினர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
    • விழாவில் இசை நாற்காலி, வாளியில் பந்து போடுதல், பேச்சுப்போட்டி நடை பெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வியாபாரிகள் சங்கத்தின் 90-வது ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவுக்கு வியாபாரிகள் சங்க தலைவர் என்.முருகன் தலைமை தாங்கி பேசினார். செயலாளர் எஸ்.ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜோவின் பார்ச்சுனேட் 2022-2023-ம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையை வாசித்தார். சங்க ஆடிட்டர் சீராக் இசக்கியப்பன் சங்க கணக்குகள் முறையாக சரியாக இருப்பதாக அறிக்கை அளித்தார். ஆடிட்டர் சந்யானந்த சுப்பிர மணியன் அறிக்கை யை ஜோசப் வாசித்தார். பின்னர் நிர்வாகிகள் அருணா, பாலமுருகன், சிதம்பரகுமார், ஜீவா, கணேசன், கார்த்தீசன், செலின், ராஜேந்திரன், சேதுராமலிங்கம், சுரேஷ், சங்கரன், ரவிசங்கர் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.

    கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் இறந்தால் ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்குவது என தீர்மானி க்கப்பட்டது. வள்ளியூர் அரசு மருத்துவ மனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவும், அனைத்து அரசு பஸ்களும் வள்ளியூர் வந்து செல்ல நடவடிக்கை எடுத்த சபாநாயகர் அப்பாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பஸ்நிலைய கட்டுமானப் பணியையும், சந்தை கட்டுமானப்பணியையும் விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளவது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறை வேற்றப்பட்டது. முன்னதாக வியாபாரிகளின் குழந்தைகளில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மற்றும் 2-ம் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கமும்,கேடயமும் வழங்கப்பட்டது. 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் ரொக்கமும் ,கேடயமும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வியாபாரிகளின் குடும்ப விழா கொண்டாடப் பட்டது.

    இவ்விழாவில் இசை நாற்காலி, வாளியில் பந்து போடுதல் மற்றும் பேச்சுப்போட்டி நடை பெற்றது. போட்டிகளை வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, பேரூராட்சி தலைவி ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கும், பங்கேற்ற அனை வருக்கும் பரிசு வழங்க ப்ப ட்டது. துணைத் தலை வர் ரா தா கிருஷ்ணன் வரவேற்றார். உதவி செய லாளர் எம்.காதர்மைதீன் நன்றி கூறினார்.

    • கடைகளில் முத்திரையிடாத 30 தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டது.
    • எடை அளவுகளை முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு கொள்ள வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப்பிரசன்னா தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள்,

    தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள மீன், இறைச்சி கடைகள் மற்றும் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பழுது பார்ப்பவர் நிறுவனங்களில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்படுதல் தொடர்பாக கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இதில் எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 நிறுவனங்கள், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 27 நிறுவனங்கள் மற்றும் மறுபரிசீலனைச்சான்று வெளிக்காட்டி வைக்காத 11 நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீன் மற்றும் இறைச்சி கடைகளில் முத்திரையிடாத 30 தராசுகள் பொது பறிமுதல் செய்யப்பட்டது.

    எடை அளவுகளை தொழிலாளர் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிர்க்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம், பொறுப்பு) முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.

    • போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
    • சேமிப்பு கிடங்கு ஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் ஏராள மானோர் கலெக்டர் அலுவல கத்துக்கு வந்தனர்.

    திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் வல்லம் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஆனால் இதற்கான விதை தரமான முறையில் வழங்கப்படவில்லை , போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு தரமான விதை சான்று பெற்ற வியாபாரிகள் மட்டும் விற்பனை செய்வதை உறுதி செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலையை கட்டுப்படியான விலை கிடைத்திடவும், சேமிப்பு கிடங்கு ஏற்பாடு செய்தி டவும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கொடுத்தனர்.

    • சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான்.
    • மொத்தம் உள்ள 34 அங்காடிகளில் தலையாட்டி பொம்மைகள் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் முன்பு தலையாட்டி பொம்மை விற்பனை கடைகள் இருந்தன. கடந்த 2014-ம் ஆண்டு இந்த கடைகள் அகற்றப்பட்டன.

    இதையடுத்து மீண்டும் பெரிய கோவில் பகுதியில் தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி திறக்க வேண்டும் என்று பெரிய கோவில் வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், வியாபாரிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இதனைத் தொடர்ந்து பெரிய கோவில் முன்பு ஒரே இடத்தில் 34 தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் என்ற பெயரில் அங்காடி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை பெரிய கோவில் வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், பெரிய கோவில் முன்பு ஒரே இடத்தில் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தோம்.

    இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலரின் முயற்சியால் ஒரே இடத்தில் அங்காடிகள் அமைக்கப்பட்டு இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    மொத்தம் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன.

    இங்கு விலை குறைவாகவும் தரமாகவும் தலையாட்டி பொம்மைகள் கிடைக்கும் என்றார்.

    தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான்.

    தற்போது ஒரே இடத்தில் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பலமுறை நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.
    • ஏமாற்றமடைந்த வணிகர்களும் மற்றும் பொதுமக்களும் தங்களது பணத்தை பெற்றுத்தருமாறு சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்நிதி நிறுவனத்தில் சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

    குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு தங்களது முதலீட்டை திருப்பி தருமாறு பணம் கட்டியவர்கள் கேட்ட போது நிதி நிறுவனம் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியுள்ளது.

    பலமுறை நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நிதி நிறுவனம் அறிவிப்பு எதுவும் இன்றி மூடப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத் தலைவர் ஞானமணி தலைமையில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த வணிகர்களும் மற்றும் பொதுமக்களும் தங்களது பணத்தை திருப்பி பெற்றுத்தருமாறு சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பொது மக்களின் முதலீட்டை திருப்பி கொடுக்கா மல் நிதி நிறுவன ம்மூட ப்பட்ட சம்பவம் சீர்காழி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பருத்தி ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து மொத்தம் 2287 லாட், சுமார் 3542.70 குவிண்டால் பருத்தி கொண்டுவரப்பெற்றது.
    • கும்பகோணம், பண்ரூட்டி, திருப்பூர், தேனி மற்றும் செம்பனார்கோவில், குன்னூர், தெலுங்கானா சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் விற்பனைக்குழு, விளம்பரம் மற்றும் பிரசாரம் கண்காணிப்பாளர் சித்தார்த்தன் தலைமையிலும், தஞ்சாவூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முருகானந்தம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி, மேற்பார்வையாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

    பருத்தி ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்திலிருந்து மொத்தம் 2287 லாட், சுமார் 3542.70 குவிண்டால் பருத்தி கொண்டுவரப்பெற்றது. கும்பகோணம், பண்ரூட்டி, திருப்பூர், தேனி மற்றும் செம்பனார்கோவில், குன்னூர், தெலுங்கானா சார்ந்த 11 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.3 கோடி ஆகும். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை ரூ.9,719/- குறைந்தபட்ச விலை ரூ.8,149/- சராசரி மதிப்பு ரூ.9,000/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் போலீசார்கள் செய்திருந்தனர்.

    • ஆறுமுகநேரியில் 5 பேர் பணியாற்றி வந்த இடத்தில் தற்போது ஒருவர் மட்டுமே மின் கம்பியாளராக உள்ளார்.
    • ஆறுமுகநேரி பகுதிக்கு கூடுதல் மின் கம்பியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி வியாபாரிகள் ஐக்கிய சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கிழக்கத்தி முத்து, செயலாளர் துரைசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ராஜாராம் அறிக்கை வாசித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் பாஸ்கரன், பாலமுருகன், அழகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஆறுமுகநேரி பேரூராட்சி விரைவில் நகராட்சியாக மாற்றப்பட உள்ளது. இந்த நிலையில் மின்வாரியத்தின் சார்பில் ஒரு மின் கம்பியாளர் மட்டுமே பணியில் உள்ளார். ஏற்கனவே 5 பேர் பணியாற்றி வந்த இடத்தில்தான் தற்போது ஒருவர் மட்டுமே மின் கம்பியாளராக உள்ளார். இதன் காரணமாக மின் பழுது பார்ப்பு பணி மற்றும் மின் வினியோகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆகவே ஆறுமுகநேரி பகுதிக்கு கூடுதல் மின் கம்பியாளர்களை நியமித்து சீரான மின்விநியோகத்தை ஏற்படுத்த உடனடி நடவடிக்கையை மின்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • காவல் செயலி தொடர்பாக இந்திய நாடார்கள் பேரமைப்பு தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தது.
    • தற்போது கோரிக்கையை ஏற்று வணிகர்களுக்கான காவல் செயலியை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது.

    வீ.கே.புதூர்:

    தமிழக அரசால் வியாபாரிகளின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவல் செயலி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவனத் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன் நாடார் வழிகாட்டுதலின்படி மாநிலத் துணைத்தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் கலந்துகொண்டு தென்காசி பகுதி வியாபாரிகளுக்கு வழங்கினார்.

    இதில் கலந்துகொண்டு லூர்து நாடார் பேசுகையில், மாமூல் கேட்டு மிரட்டி சில இடங்களில் வியாபாரிகள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க பாதுகாப்பு காவல் செயலியை தமிழக அரசு உருவாக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய நாடார்கள் பேரமைப்பு தமிழக முதல்-அமைச்சருக்கு வைத்திருந்தது. தற்போது கோரிக்கையை ஏற்று வணிகர்களுக்கான காவல் செயலியை தமிழக அரசு உருவாக்கி இருக்கிறது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நாடார்கள் பேரமைப்பு தென்காசி நகர தலைவர் சுப்ரபிமணியன், சுரண்டை நகர தலைவர் ஆனந்த் காசிராஜன்,தென்காசி தினசரி காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் பாண்டியன், செயலாளர் நாராயணன், துணைத் தலைவர் ராமசாமி, பொருளாளர் சுடலை கனி, துணைச் செயலாளர் வெங்கடேஷ், துணை பொருளாளர் சிவசுப்பிரமணியன்,

    தென்காசி வியாபாரிகள் சங்க தலைவர் பரமசிவன்,செயலாளர் மாரி யப்பன், துனைசெயலாளர் அருணாச்சலம், பொருளாளர் மைதீன், சந்திரமதி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை ஸ்ரீபுரம் சாலை பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
     
    மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மாநகராட்சி பொறியாளர் அசோகன், செயற்பொறியாளர் நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

    தச்சநல்லூர் கிராண்ட் புதுத் தெருவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மகாராஜன் மனு அளிப்பதற்காக தவழ்ந்தபடி கூட்டத்திற்கு வந்திருந்தார். உடனே கமிஷனர் விஷ்ணு சந்திரன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவரிடம் கோரிக்கை மனுவை பெற்றார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனக்கு இரண்டு கால்களும் கிடையாது. எனது மனைவிக்கு வாய் பேசமுடியாது. இதனால் எங்களது குழந்தைகளை வளர்ப்பதற்கு வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

    எனவே மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுத்து எனக்கு ஒரு பெட்டிக்கடை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனுவை ஆய்வு செய்த கமிஷனர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

     உதயம் வெங்கடேஸ்வரா நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வண்ணார்பேட்டை வடக்கு புற வழிச்சாலை உடையார்பட்டி பகுதியில் உள்ள யூ.வி. நகர் பகுதியில் பூங்காக்கள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை மற்றும் இணைப்பு சாலை பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

    அண்ணாமலை புதூர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அளித்த மனுவில் பேட்டை பகுதி அண்ணாமலை புதூரில் பூங்கா அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
     ஆனால் அது முறையாக பராமரிக்கப்படாததால் அந்த இடத்தில் முட்செடிகள் வளர்ந்து விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. எனவே விரைவில் அந்த முள் செடிகளை அகற்றி விட்டு பூங்கா அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    தச்சை மண்டலம் பாலபாக்யா நகர் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் அளித்த மனுவில் பாலபாக்யா நகர் தெரு விளக்குகள் சரியாக எரியவில்லை. மேலும் பெரும்பாலான வீடுகளில் கதை விளக்கம் சரியாக தெரியவில்லை.

    இதனால் தபால் கொண்டு வரும் தபால்காரர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதேபோல் ஒவ்வொரு தெருவுக்கும் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று கூறிவந்தனர்.

    நெல்லை சந்திப்பு எஸ்என் ஹை ரோடு வியாபாரிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் சந்திப்பு ஸ்ரீ புரத்தில் உள்ள சிவசக்தி சாலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சாலையில் ஏராளமான வியாபாரிகள் உள்ளனர். குழாய் பதிக்கும் பணி இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. எனவே வணிகர்களின் நலன் காப்பதற்கு இந்த பணிகளை விரைவில் முடித்து சாலை அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

     நெல்லை மாநகர் சந்திப்பு பகுதி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் அளித்த மனுவில், சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் அனைத்து பஸ்களும் வந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
    ×