உள்ளூர் செய்திகள்
பண்ணாரி மாரியம்மன்.

திருப்பூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

Published On 2022-05-08 07:40 GMT   |   Update On 2022-05-08 07:40 GMT
அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மஞ்சள் நீர் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.
திருப்பூர்: 

திருப்பூர்மாஸ்கோ நகர் சரளைக்காடு, ஸ்ரீ வெள்ளை விநாயகர், ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 1-ந் தேதி பொட்டுச்சாமிக்கு பொங்கல் வைத்தலுடன் தொடங்கியது. மறுநாள் சுவாமிக்கு அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

பெண்கள் பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்தனர். மாவிளக்கு ஊர்வலமும், மதியம் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நுாற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகள் முன் பொங்கல் வைத்தனர்.மதியம் உச்சிபூஜை முடிந்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாக விடப்பட்டிருந்த ஆடு வெட்டப்பட்டு, கோழி அறுக்கப்பட்டது.

அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மஞ்சள் நீர் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. இன்று விளையாட்டுபோட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
Tags:    

Similar News