உள்ளூர் செய்திகள்
கொலை

கள்ளதொடர்பை கண்டித்ததால் மனைவியை வெட்டி கொன்ற கணவர் கைது

Update: 2022-05-06 11:31 GMT
கள்ளக்காதலியுடனான தொடர்பை கண்டித்த மனைவியை வெட்டி கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருசநாடு:

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள குப்பிநாயக்கன்பட்டி கிழக்குதெருவை சேர்ந்தவர் லட்சுமணன்(59). இவரது மனைவி ராஜாத்தி(50). லட்சுமணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டிற்கு சரிவர பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதனை மனைவி ராஜாத்தி கண்டித்துள்ளார். இருந்தபோதும் அவர் அதனை கண்டுகொள்ளாமல் கள்ளக்காதலி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராஜாத்தி புகார் அளித்தார்.

தன்மீது புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த லட்சுமணன் வீட்டில் இருந்த மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை கழுத்தை இறுக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின்பேரில் கண்டமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் ராஜாத்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த லட்சுமணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News