உள்ளூர் செய்திகள்
.

அரசு ஆஸ்பத்தியில் இறந்த முதியவர்

Update: 2022-05-06 08:12 GMT
சேலம் அரசு ஆஸ்பத்தியில் இறந்த முதியவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம்:

சேலம் அரசு மருத்துவமனை அம்மா உணவகம் முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல் நலம் சரியில்லாமல் படுத்து கிடந்தார். 

 இதையடுத்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி இரவு 11.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய வலது கால், இடது கால் முட்டியில் காய தழும்பு இருந்தது.  

இந்த சம்பவம் குறித்து சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த அந்த முதியவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது பெயர் என்ன? உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News