உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான சிவப்பிரகாசம்.

சாலை தடுப்பில் மோதி வாலிபர் பலி

Update: 2022-05-05 10:01 GMT
சுவாமிமலை அருகே சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
சுவாமிமலை:

தஞ்ைச மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அசூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அசூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த  ரமேஷ்குமார் என்பவரது மகன் சிவப்பிரகாசம் (வயது 23) சுவாமிமலை அருகே ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது தேவர் சிலை முன்பு உள்ள சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடத்தில் எதிர்பாராதவிதமாக மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.

இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு  கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை தஞ்சாவூருக்கு கொண்ட சென்றபோது பாபநாசம் அருகே வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சிவப்பிரகாத்தின் உடல் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சுவாமிமலை இன்ஸ்மபெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News