உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

செங்கோட்டையில் ஆட்டோவுக்கு தீ வைப்பு-ரவுடி உள்பட 3 பேர் கைது

Published On 2022-05-02 09:32 GMT   |   Update On 2022-05-02 09:32 GMT
செங்கோட்டையில் ஆட்டோவுக்கு தீ வைத்த ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள வல்லம் சந்தனமாரி–யம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை(வயது 36). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.

இவரது உறவினரான சதீஷ் என்பவருக்கும், அதே பகுதியை  சேர்ந்த சுபாஷ் கண்ணன்(26) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக குற்றாலம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் சுபாஷ் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் சுடலை தான் என்று நினைத்து அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு அங்குள்ள சந்தனமாரியம்மன் கோவில் அருகே சுடலை தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு தூங்க சென்றார். திடீரென நள்ளிரவில் ஆட்டோ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

உடனே சுடலை மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தொடர்ந்து அவர் செங்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அப்போது முன் விரோதம் காரணமாக சுபாஷ் கண்ணன் ஆட்டோவுக்கு தீ வைத்திருக்கலாம் எனவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசில் அவர் தெரிவிதுள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆட்டோவுக்கு தீ வைத்தது சுபாஷ் கண்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 16  வயது சிறுவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது.

இைதயடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதான சுபாஷ் கண்ணன் மீது செங்கோட்டை, குற்றாலம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளதாகவும், அவர் பெயர் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News