உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2022-05-01 08:47 GMT   |   Update On 2022-05-01 08:47 GMT
குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூர்:

அக்ஷய திருதியை பண்டிகை வருகிற 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே குழந்தை திருமணங்கள் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அக்ஷய திருதியை பண்டிகையையொட்டி குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், அனைத்து மகளிர் காவல் நிலையம், சைல்டுலைன், இந்து சமய அறநிலையத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலர்கள் ஆகியோர்களை கொண்டு குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்யைாக மாவட்ட அளவில் குழந்தை திருமணம் நடைபெறவிடாமல் தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தை திருமணம் நடைபெற்றதை கண்டறிந்தால் கடும் நடவ–டிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News