உள்ளூர் செய்திகள்
தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்தபோது எடுத்தபடம்.

சிவகிரி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

Published On 2022-05-01 08:44 GMT   |   Update On 2022-05-01 08:44 GMT
வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
சிவகிரி:

வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனையில் வைத்து தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி செய்து காட்டினர்.

இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தீ விபத்து ஏற்பட்டால் தீ மேலும் பரவாமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்தும், தீவிபத்தில் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும், தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் உள்ளே சிக்கிய பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தீவிபத்து தடுப்பது குறித்தும், மீட்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனை டாக்டர் இசக்கி தலைமை தாங்கினார். டாக்டர்கள் பேச்சியம்மாள், முத்துகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சித்தா மருத்துவ மருந்தாளுநர் தனகேஸ்வரி மற்றும் மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News