search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rehearsal"

    • பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?
    • வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை பத்திரமாக மீட்பது எப்படி?

    தஞ்சாவூர்:

    பேரிடர்களினால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் 1989-ம் ஆண்டு முதல் அக்டோபர் 13-ம் தேதி சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினமாக ஐக்கிய நாடு பொது சபையினால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    பேரிடர்களின் தன்மையை அறிந்து அதன் அபாயத்தை எவ்வாறு குறைப்பது, பேரிடர் காலத்தில் மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.

    இந்த நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

    இந்த பேரணியை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    பேரணியானது தஞ்சாவூர் அழகி குளத்தில் முடிவடைந்தது.

    மன்னர் சரபோஜி கல்லூரி , பாரத் கல்லூரி, மருதுபாண்டியர் கல்லூரி, சுவாமி விவேகானந்தா கல்லூரி, டாக்டர் நல்லி குப்புசாமி மகளிர் கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி, பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 500 மாணவ- மாணவிகள் பேரிடர் குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளுடன் பங்கேற்றனர்.

    பேரணியின் முடிவில் அழகிகுளத்தில் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த மாதிரி ஒத்திகை பயிற்சியினை மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி, செல்வம் மற்றும் தீயணைப்பு, மீட்புத்துறையினர், மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமையின் ஆத்தபுத்திரா தன்னார்வலர்களுடன் இணைந்து வழங்கினார்கள்.

    இதில் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை பத்திரமாக மீட்பது எப்படி ? என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு செயல்களை பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் செய்து காண்பித்தனர்.

    இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகர நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி, தாசில்தார் சீமான், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் , இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் வரதராஜன், துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், பொருளாளர் ஷேக் நாசர் , ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ், 108 ஆம்புலன்ஸ் மேலாளர் விமல், பேரிடர் பயிற்றுனர்கள் பெஞ்சமின், சுரேஷ், மாநகர உறுப்பினர் செந்தில்குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.
    • பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செங்குளம் கண்மாயில் தீயணைப்பு, வருவாய் துறையினர் இணைந்து பேரிடர் மேலாண்மை தினத்தை முன்னிட்டு வடகிழக்கு பருவமழை கால பேரிடர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.

    திருமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து ராமன் தலைமையில் மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் அவர் களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து செய்து காட்டப்பட்டது.

    மேலும் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எவ்வாறு முதலு தவி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கியாஸ் அடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.

    • வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நடைபெற்றது
    • தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மழை வெள்ளம் வரும்போது, கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்வது, மற்றவர்களை காப்பாற்றுவது குறித்து செயல்முறை ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் தீவிபத்தின் போது தற்காத்து கொள்வது குறித்தும், தீயை கட்டுப்படுத்துவது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். காட்டினார்கள். இதில் பள்ளி தலைமையாசிரியர் வளர்மதி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்சி விமான நிலையத்தில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது
    • எரிபொருள் நிரப்பும்போது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்த ஒத்திகை நடைபெற்றது

    கே.கே.நகர்,

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் நிறுவனம் எரிபொருள் நிரப்பும் பணி செய்து வருகின்றன. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பும்போது தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் முறைகள் குறித்த ஒத்திகை செய்து காட்டப்பட்டது. இதில் விமான நிலைய ஆணையைக்குழு அதிகாரிகள் திருச்சி விமான நிலையம் தீயணைப்பு துறை விமான எரிபொருள் நிரப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட நிர்வாகத்திற்கு, சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.
    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    கடலூர்:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புயல் சூழ்நிலைகளை எதிர்கொள்வது தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சியினை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு, சென்னை கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

    அதன்படி, கடலூர் செம்மங்குப்பத்தில் புயல் பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சி இன்று காலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். இதில் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் விடுக்கப்படும் புயல் பேரிடர் ஒத்திகை அறிவிப்புகள் மற்றும் தகவல் பரிமாற்றமானது, அரசுத்துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பது குறித்தும், மீட்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கி கூறி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புத்துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் குறிஞ்சிப்பாடி சிறுபாளையூர் (வடக்கு), புவனகிரி சிலம்பிமங்கலம், சிதம்பரம் பெராம்பட்டு, காட்டுமன்னார்கோவில் சர்வராஜன்பேட்டை ஆகிய இடங்களிலும் புயல் பேரிடர் மாதிரி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    • ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது
    • ஒத்திகையை கலெக்டர், எஸ்.பி. பார்வையிட்டனர்

    ஈரோடு,

    ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுத ந்திர தின விழா கொண்டா டப்பட்டு வருகிறது. தற் போது விளையாட்டு மைதா னத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாளை (செவ்வாய்க்கி ழமை) சுதந்திர தின விழா ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை மைதா னத்தில் நடக்கிறது. நாளை காலை கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா தேசியக்கொ டியை ஏற்றி வைத்து மரியா தை செலுத்துகிறார்.

    அதை த்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் சுத ந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களுடைய வாரிசுதாரர்கள் கவுரவி த்து, அரசு துறையில் சிறப்பாக பணியா ற்றிய அலுவல ர்கள், பணியாள ர்கள் மற்றும் தன்னார்வ லர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து ஈரோடு அரசு இசைப்பள்ளி மற்றும் பள்ளி மாணவ-மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இன்று காலை ஆணைக்கல்பாளை யம் ஆயுதப்படை மைதா னத்தில் இன்று காலை சுதந்திர தின விழாவை முன்னிட்டு போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த அணி வகுப்பு ஒத்திகையை கலெ க்டர் ராஜகோபால் சுன்கரா மற்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர் திறந்த வெளி ஜிப்பில் சென்று பார்வையிட்டனர். இதில் போலீசாருடன், ஊர் காவல் படையினர், தேசிய மாணவர் படையி னர் கம்பீரமாக நடந்து சென்றனர். இதைத் தொட ர்ந்து கலெக்டர் நாளை நடைபெற உள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். இதில் டவுண் டி.எஸ்.பி. ஆறுமுகம், ஏ.எஸ்.பி. தானஸ் பிரியா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    76-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (15-ந்தேதி) நாடு முழுவ தும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    சென்னை காமராஜர் சாலையில் கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சுதந்திர தினவிழாவில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி இதற்கான இறுதி ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்தது. இதில் போலீசார் சீருடையில் அணி வகுத்தனர்.

    இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் சுதந்திரதினத்தன்று முதலமைச்சரை காவல்துறை வாகன அணி வகுப்புடன் அழைத்து வருவது போன்று ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

    அதனை தொடர்ந்து கமாண்டோ படை, குதிரைப் படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டு தேசிய கொடியைஏற்றி பேசுவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    அதன் பின் தகைசால் தமிழர் விருது, ஏபிஜே அப்துல்கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நடந்தது.

    இதையொட்டி இன்று காலை காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    காலை 8 மணி முதல் ஒத்திகை நிகழ்ச்சி முடிவடைந்த 10 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை, கொடிமரச் சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது

    போலீசாரின் அணி வகுப்பு ஒத்திகையையொட்டி இன்று சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளம், மற்றும் காமராஜர் சாலை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதில் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் பேரிடர்கால ஒத்திகை பயிற்சி நடைபெற்றது
    • 100 இடங்களில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தீயணைப்பு நிலையம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், தொழிற்சாலைகள் , அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் என 100 இடங்களில் தீ தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி வெள்ளத் தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி மாவட்ட அலுவலர் அம்பிகா உத்தரவின்பேரில் பெரம்பலூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில் பெரம்பலூர் உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு தலைமையில் நிலைய அலுவலர் (போக்குவரத்து) முருகன் மற்றும் முன்னணி தீயணை ப்பாளர் இன்பஅரசன் ஆகியோர் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்கமும், தீத்தடுப்பு சாதனங்களை கையாளும் விதம் குறித்தும், குடியிருப்பு மற்றும் பணிபுரியும் இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது, பாதுகாப்பாக வெளியேறுவது எவ்வாறு என்பது குறித்து செயல் விளக்கம், ஒத்திகை மூலம் விழி ப்புணர்வு ஏற்படு த்தினர். இதனை அரசு அலுவ லர்கள், பணியாளர்கள், மாணவ , மாணவிகள், வாசகர்கள் மற்றும் பொது மக்கள் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.

    • பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் பயிற்சி நடைபெற்றது.
    • வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாசில்தார் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் துறை சார்பில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மீட்பு பணி குறித்து பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் மாவட்ட அலுவலர் குமார் உத்தரவின் பேரில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    ஒத்திகையின் போது திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சண்முகம் கூறுகையில் பெண்கள் சமையல் செய்யும்போது பருத்தி ஆடை அணிவது நல்லது, குழந்தைகளை அடுப்பின் அருகில் தீப்பெட்டியுடன் விளையாட அனுமதிக்காதீர்கள், வீட்டிற்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல், டீசல், வெடி பொருட்கள் போன்றவற்றை சேமித்து வைக்காதீர்கள். ஆடையில் தீப்பற்றிக் கொண்டால் எங்கேயும் போகாமல் கீழே படுத்து உருளுங்கள். பின் தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒத்திகை யில் திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட கலந்து கொண்டனர்..

    • ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது

    ஜெயங்கொண்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ தடுப்பு போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. தற்செயலாக வீடுகளில் தீவிபத்து ஏற்படும் அப்போது எண்ணெயினால் ஏற்படும் தீயை எவ்வாறு அனைப்பது. சமையல் எரிவாயுவினால் ஏற்படும் எரிவாயு கசிவு அதனால் ஏற்படும் தீ இவைகளை எவ்வாறு கையாள்வது தீயை கட்டுப்படுத்தி அணைப்பது, தீ ஏற்பட்ட வீடுகளில் இருந்து மக்களை எவ்வாறு வீட்டிலிருந்து வெளியே கொண்டு வருவது போன்றவைகளைப் பற்றி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செயல்முறைகள் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பித்தனர். இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    • ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    தாளவாடி, ஜூன்.16-

    ஆசனூரில் தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஆசனூர் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் ஆசனூர் குளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை தண்ணீரால் நனைந்த சாக்குப்பையை போட்டு அணைப்பது குறித்தும் விளக்கம் அளிக்க ப்பட்டது. இதில் கிராம மக்கள் பங்கேற்று தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து செயல்விளக்கத்தை பார்வையிட்டனர்.

    மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் அவசர கால ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் அவசர கால ஒத்திகை  தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை இணை இயக்குனர் நிறைமதி முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் யூரியா பிரிவில் அம்மோனியா சேமிப்பு கொள்கலனிலிருந்து வெளிவரும் குழாயில் அம்மோனியா கசிந்தால் அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.

    இதை ஸ்பிக் நிறுவன தொழிற்சாலை பொது மேலாளர் செந்தில் நாயகம் அவசர கால கட்டுப்பாடு அறையிலிருந்து அம்மோனியா கசிவை கட்டுப்படுத்த உதவி பொது மேலாளர் சுப்பிரமணியன் ஆலோசனை வழங்கினார்.

    தொழிற்சாலை தலைவர் அறிவுரையின்படி தொழிற்சாலை ஊழியர்கள் பாதுகாப்பு சாதனங்கள் அணிந்து கொண்டு அம்மோனியா சகிவினை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சுற்றுச்சூழலில் மாசு நிலை சரி பார்க்கப்பட்டு ஒத்திகை நிகழ்ச்சி முடித்துக்கொள்ளப்பட்டது.

    இதில் ஸ்பிக் மற்றும் கணநீர் ஆலை நிறுவனத்தின்  தீயணைப்பு துணை வீரர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறையின் உதவி பொதுமேலாளர் ரவிச்சந்திரன் ஒத்திகை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    அவசர கால ஒத்திகை முடிந்தபின் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில், தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குனரான நிறைமதி ஒத்திகை  நடத்திய அனைவரையும் பாராட்டினார். மேலும் ஒத்திகையை சிறப்பாக நடத்த அவரது மேலான கருத்துக்களை தெரிவித்தார்.
    ×