உள்ளூர் செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது: தமிழகத்தில் காவி பெரியது, வலியது- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2022-04-28 09:37 GMT   |   Update On 2022-04-28 11:03 GMT
சாதாரண மக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் கவர்னருக்கு கொடுப்பதில்லை கவர்னர்களும் ஆளுமை மிக்கவர்கள் என்பதும் மாற்றுக்கருத்து இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை:

கோவை பேரூரில் உள்ள தமிழ்கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

தமிழ்வழிக்கல்வி மட்டுமல்ல இங்கு அம்பேத்கரின் கனவும் நிறைவெறுகிறது. ஆண்களுக்கு சமமாக பெண்கள் அமர்ந்துள்ளார்கள். அந்தளவிற்கு பெண்கள் முன்னேறி வருகிறார்கள்.

தமிழகத்தில் சுதந்திர போராட்டங்கள் அதிகம் நடந்தது. சுதந்திரத்திற்கு போராடிய வீரர்களின் பங்கும் அதிகம். ஆன்மீகத்தை விடுத்து தமிழ் வளர்ச்சி கிடையாது.ஆன்மீகம்தான் தமிழை வளர்த்தது. தமிழால் அனைத்தும் முடியும் என்பதை மடங்கள் சொல்கின்றன.

தமிழின்றி ஆன்மீகம் கிடையாது. ஆன்மீகமின்றி தமிழ் கிடையாது என்பதை மடங்கள் போதிக்கின்றன. அந்தந்த மடங்களின் விதிகளை மதிக்கிறேன்.

நான் சென்றாலே சிலவற்றை மாற்றி மாற்றி எழுதுகிறார்கள். அரசு மடாலயங்களை அழைத்து பேசும் போது அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது பக்தையாக எனது கோரிக்கை. காவி ஆன்மீகத்தை குறிக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் காவி தமிழகத்தில் பெரியது. வலியது.

நான் இவர்கள் அணியும் காவியையும் , தேசிய கொடியில் உள்ள காவியையும் எல்லா காவியையும் தான் சொல்கிறேன். ஆதீன மடங்களுக்கு நம்மால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்குதான். தவிர எங்களிடம் இருக்கும் நோட்டும் வொயிட், கோட்டும் வொயிட்.கருப்பு பணம் வைத்திருப்பவர்க்ளுக்குத்தான் பிரச்சனை.

சாதாரண மக்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள் கவர்னருக்கு கொடுப்பதில்லை கவர்னர்களும் ஆளுமை மிக்கவர்கள் என்பதும் மாற்றுக்கருத்து இல்லை. அவர்களும் சாமானிய மக்களில் ஒருவர்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News