உள்ளூர் செய்திகள்
கைது

வண்ணாரப்பேட்டை ஜவுளிக்கடையில் வாடிக்கையாளரிடம் ரூ.35 ஆயிரம் திருடிய பெண் கைது

Update: 2022-04-24 10:39 GMT
வண்ணாரப்பேட்டை ஜவுளிக்கடையில் வாடிக்கையாளரிடம் ரூ.35 ஆயிரம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

வண்ணாரப்பேட்டை, எம்.சி.ரோட்டில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இங்கு குடியாத்தத்தை சேர்ந்த ஜெபின் பிவி என்பவர் ஜவுளி எடுப்பதற்காக வந்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜெபின் பிவியின் கைப்பையில் இருந்த ரூ.35 ஆயிரத்தை மர்ம பெண் திருடி சென்று விட்டார்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது திருட்டில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டை, நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்த மஞ்சுளா என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மீண்டும் கைவரிசை காட்ட அதே கடைக்கு வந்த போது மஞ்சுளாவை ஊழியர்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags:    

Similar News