உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காய் விலை குறைவு

Published On 2022-04-22 08:24 GMT   |   Update On 2022-04-22 10:29 GMT
மூலனூர் பகுதிகளில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது.
மூலனூர்:

மூலனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் முருங்கை சாகுபடி நடைபெறுகிறது. அதன்படி இந்த பகுதியில் விளையும் முருங்கைக்காய் மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.  

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக் காய்களை வாங்கி செல்கின்றனர்.  மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து  அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இந்த நிலையில் வடமாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளனர். 

அது மட்டுமல்ல தற்போது மூலனூர் பகுதிகளில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு வரத்து அதிகரித்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கலவை அடைந்துள்ளனர். 

 கடந்த வாரம் ரூ .15- க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ செடி முருங்கைக்காய் இந்த வாரம் ரூ. 12- க்கும், மரம் முருங்கை ரூ 5- க்கும், கரும்பு முருங்கை ரூ. 15-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
Tags:    

Similar News