உள்ளூர் செய்திகள்
கைது

வடபழனியில் போலீஸ்காரர் மகளிடம் நகை பறிப்பு- கோலமாவு வியாபாரி கைது

Update: 2022-04-20 07:39 GMT
வடபழனியில் போலீஸ்காரர் மகளிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட கோலமாவு வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:

வடபழனி பக்தவச்சலம் காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் தாமோதரன். மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர். இவரது மகள் ரித்திகா. இவர் நேற்று மாலை வீட்டு வாசலில் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சைக்கிளில் வந்த மர்ம நபர் ரித்திகாவிடம் பேச்சுகொடுத்தப்படி அவள் அணிந்திருந்த ½ பவுன் தங்க செயினை பறித்து தப்பி செல்ல முயன்றார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவனை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து வடபழனி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்டது குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த கோலமாவு வியாபாரியான மரியான் என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News