உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் குரு பெயர்ச்சி விழா சிறப்பு பூஜை

Update: 2022-04-15 11:10 GMT
ஸ்ரீ கன்னிமூல கணபதிக்கு 108 குடம் பாலாபிஷேகம் நடந்தது.
உடுமலை:

உடுமலை கோவில்களில் குரு பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு குரு பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி உடுமலை குட்டைத்திடலில் அமைந்துள்ள சித்தி, புத்தி விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை சிறப்பு யாகம் நடந்தது.

தொடர்ந்து ஸ்ரீ கவுரி தட்சிணா மூர்த்திக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர வழிபாடு, கோபூஜை, குருப்பிரீதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் ஸ்ரீ கன்னிமூல கணபதிக்கு 108 குடம் பாலாபிஷேகம் நடந்தது. 

அதே போல் பிரசன்ன விநாயகர் கோவிலில், குரு பெயர்ச்சி விழா சிறப்பு யாகமும், தட்சிணா மூர்த்திக்கு பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News