உள்ளூர் செய்திகள்
பாரதியாரின் குடும்பத்தினர், எல். முருகன், ஆர்.என். ரவி

ஆளுநர் மாளிகையில் மகாகவி பாரதியார் சிலை திறப்பு

Published On 2022-04-14 19:24 GMT   |   Update On 2022-04-14 19:24 GMT
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சிலை திறப்பு விழா நடந்தது.
சென்னை:

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன் முன்னிலையில் தமிழக ஆளுநர்  ஆர். என். ரவி மகாகவி பாரதியாரின் முழு உருவச் சிலையை ஆளுநர் மாளிகையில்  திறந்து வைத்தார். 

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சிலை திறப்பு விழா நடந்தது. 

விழாவில் கலந்து கொண்ட மகாகவி பாரதியாரின் குடும்பத்தினர் மத்திய இணை மந்திரி மற்றும் தமிழக ஆளுநர் உடன், புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

மேலும், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவினை முன்னிட்டு நடந்த கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் பரிசுகளை வழங்கினார். 
Tags:    

Similar News