என் மலர்
நீங்கள் தேடியது "ஆளுநர் ஆர்என் ரவி"
- ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முனைவர் பட்டம் பெற வந்த மாணவர் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மனு அளித்தார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையேயான மோதல் போக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உட்பட பல நிகழ்வுகளில் வெளிப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழக உயர்கல்வி அமைச்சர்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களைப் புறக்கணித்துள்ளனர். இருப்பினும் ஒரு மாணவர் மேடையில் ஆளுநரை வெளிப்படையாக அவமதித்தது இது முதல் முறையாகும்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி...
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 759 பேருக்கு பட்டம் வழங்கினார்.
அப்போது, ஆளுநரிடம் பட்டம் பெற மறுப்பு தெரிவித்த நாகர்கோவிலை சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, பல்கலைக்கழக துணைவேந்தர் என்.சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பாக பட்டம் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவதால் நான் அவரிடம் இருந்து பட்டம் பெறுவதை விரும்பாமல் துணைவேந்தரிடம் பட்டம் வாங்கினேன். எனக்கும் அவருக்கும் எந்தவிட ஒரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது. திராவிட மாடலை நான் விரும்புகிறேன். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதால் நான் இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிகழ்வு பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜன் என்பவரின் மனைவி ஜீன் ஜோசப், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் என கூறி உள்ளார். காலம் காலமாக கட்சியில் பெயர் வாங்க, தி.மு.க.வினர் அரங்கேற்றி வரும் நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக்கொள்ளக்கூடாது என கட்சியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், மாணவி ஒருவர், ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் அல்ல. அவரது கொள்கை பிடிப்பும், துணிச்சலும் பாராட்டத்தக்கது. இருப்பினும், சபை நாகரிகம் என்பதும் முக்கியமானது. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் செயல், ஒரு வகையில் ஏற்புடையது என்றாலும், தனிமனித அணுகுமுறை என வரும்போது சபை நாகரிகமும் முக்கியம். தமிழையும், தமிழ் மக்களையும் ஆளுநர் அவமதித்து பேசி வருகிறார். இதனால், அவரது தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று கூறினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் ஐகோர்ட் மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த பிஎச்.டி மாணவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் இருக்கும்போது, பட்டம் வழங்கிய துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதிகள், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை அவமதிக்கும் வகையில் மாணவி நடந்து கொண்டது ஏற்புடையதல்ல. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகத்தின் மாண்பு காக்கப்பட வேண்டும். இளைய தலைமுறையினருக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
சிலர் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிரான எதிர்ப்பாகப் பார்க்க, பலர் இது போன்ற ஒரு புனிதமான விழாவை அவமதிப்பது சரியல்ல என கருத்து தெரிவித்தனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் புகார் அளித்த மாணவர்...
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த அக்.14-ந்தேதி 39-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினர்.
அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். இதனால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர் பிரகாஷ் அளித்த மனுவில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள சில வழிகாட்டிகள் ஆராய்ச்சி அறிஞர்களை ஆராய்ச்சி அறிஞர்களாகக் கருதுவதில்லை, கல்விப் பணிகளைத் தவிர, ஆராய்ச்சி அறிஞர்கள் சில வழிகாட்டிகளின் வீட்டில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் விடுதிகள் உள்ளன. ஆனால் அது பொது விடுதியாக நடத்தப்படுவதால், ஆதி திராவிட (பட்டியலின சாதி) ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மாதாந்திர மெஸ் கட்டணம் செலுத்துவதில் பெரும் சுமை உள்ளது.
வைவா நேரத்தில், ஆராய்ச்சி அறிஞர்கள் ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய சில வழிகாட்டிகள் அறிவுறுத்துகிறார்கள். இதுமட்டுமின்றி, சில வழிகாட்டிகளின் நிர்ப்பந்தத்தால், வைவா வாய்ஸ் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின், ஆராய்ச்சி அறிஞர்கள், துறையில் உள்ள சில வழிகாட்டிகளுக்கு பணம், உணவு, தங்கம் வழங்குகின்றனர். இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்

இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழா நிறைவடைந்தவுடன் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார்.
விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தனர். மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
இதையடுத்து, அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில், பல்கலையில் முனைவர் பட்டம் பெற பயிலும் மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். வழிகாட்டு ஆசிரியரின் தனிப்பட்ட அல்லது வீட்டு வேலைகளை செய்ய மாணவர்களை வற்புறுத்தக் கூடாது. பாதிக்கப்படும் மாணவர்கள் பல்கலைக்கழங்களில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்று பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை எச்சரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார்.
- தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை.
சென்னை:
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் 202-வது பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
வள்ளலாருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை இன்னும் கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது. பிரதமர் மோடி சமரச சன்மார்க்கத்தை கடைப்பிடிக்கிறார். அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் சன்மார்க்கி.
ஆனால் தமிழகத்தின் நிலை வருத்தமளிக்கிறது. தமிழ்நாட்டில் தலித் சமுதாயத்திற்கான உரிமை மிகவும் கேள்விக்குறியாக இருக்கிறது. அறிவிருக்கும் சமுதாயம் எப்படி ஏற்றத்தாழ்வுடன் இருக்க முடியும். வள்ளலார் கூறியதுதான் தமக்கு நினைவுக்கு வருகிறது.
தமிழகத்திற்கு எதிராக யாரும் செயல்படவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. ஆனால் நான் பயணிக்கும் இடமெங்கும் தமிழ்நாடு போராடும் என சுவர்களில் எழுதியுள்ளனர். தமிழ்நாடு யாருடன் போராடும்? தமிழக மக்கள் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மு.க.ஸ்டாலின் சமீப காலமாக பேசும்போது தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், வென்று காட்டுவோம், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேள்வி கேட்கும் வகையில் தமிழ்நாடு யாருடன் போராடும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- சட்டசபை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- 4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 4 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
கடந்த மார்ச் 14-ந்தேதி முதல் ஏப். 29-ந்தேதி வரை நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த நிலையில் இன்று 4 சட்டதிருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
4 மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.
4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
- உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ராஜ் பவன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ் புத்தாண்டின் விசேஷமிக்க தருணத்தில் அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நாள் நமது பெருமைமிக்க பண்டைய மற்றும் வளமான தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியம், துடிப்பான நிகழ்காலம் மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் கொண்டாட்டமாகும்.
புத்தாண்டு அனைவருக்கும் வளம், நல்ல ஆரோக்கியம், புதுப்பிக்கப்பட்ட ஆற்றல் மற்றும் ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டுவரட்டும்.
#அமிர்தகாலத்தில் #வளர்ச்சியடைந்தபாரதம்2047 -க்கான வளர்ந்த தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான நமது கூட்டுறுதியை இது மேலும் வலுப்படுத்தட்டும்".
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
- தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
சென்னை:
மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர்.
இதனால் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பிய பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சுயமரியாதை இருந்தால் அவர் இன்று இரவே ராஜ்பவனை விட்டு புறப்பட்டு போகவேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம்.
- தமிழக மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள்.
சென்னை:
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் தகவல் உண்மையா? இல்லையா? என்பதை கண்டறிய பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து 8 பேர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் நேற்று சென்னை வந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.
இன்று கோவை, திருப்பூர் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்பதை அறிந்து கொண்டனர்.
இப்போது இது தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது.
இவ்வாறு ஆளுநர் பதிவிட்டுள்ளார்.
தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் இதை வெளியிட்டு உள்ளார்.
- அமைச்சர் பதவியை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
- ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை நியமிக்க முதல்வர் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை செந்தில் பாலாஜி எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளார்.
தற்போது அவர் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட குற்ற வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ளார். மேலும், ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.
எனவே, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது. வழக்கு விசாரணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கி உள்ளார். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆளுநரின் நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை:
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மீதான வழக்கை சுட்டிக்காட்டி ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது என்றும், வழக்கு விசாரணை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அப்பாவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், ஆளுநர் மாளிகையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து எந்த தகவலும் வரவல்லை என்று கூறிய சபாநாயகர், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்.
- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பங்கேற்றனர்.
- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கவர்னரின் 5 பக்க கடிதத்துக்கு, மு.க.ஸ்டாலின் பதில் அளித்து 6 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்வதாக ஜூன் 29-ந்தேதி இரவு 7 மணிக்கு எனக்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, பின்பு அதே நாளில் இரவு 11.45 மணிக்கு இடைக்காலமாக நிறுத்தி வைத்திருப்பதாக மற்றொரு கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் உண்மை என்னவென்பதையும், சட்டம் சொல்வதையும் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
உங்கள் கடிதங்கள் வாயிலாக நீங்கள் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சரவையில் இருந்து எந்தவொரு உதவியையோ ஆலோசனையோ கேட்கவில்லை.
நீங்கள் மிகவும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி எழுதிய கடிதத்தில், அட்டர்னி ஜெனரலின் கருத்தை பெற இருப்பதாகவும், அதுவரை முந்தைய உத்தரவை 'வாபஸ்' பெற்றுவிடுவதாகவும் கூறியுள்ளீர்கள். இது எதை காட்டுகிறது என்றால், இவ்வளவு பெரிய முக்கியமான முடிவை நீங்கள் சட்ட ஆலோசனை கேட்காமலேயே எடுத்திருக்கிறீர்கள். மத்திய மந்திரியின் தலையீடு வரும் அளவுக்கு இந்த விஷயம் சென்றிருப்பதால், நீங்கள் அவசர கதியில் செயல்பட்டிருக்கிறீர்கள் என்பதையும், அரசியல் சாசன சட்டங்களை போதிய அளவில் நீங்கள் பின்பற்றவில்லை என்பதையும் காட்டுகிறது.
எனது அமைச்சர்களும், எங்கள் எம்.எல்.ஏ.க்களும் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர். மக்களின் நம்பிக்கையே எங்களின் அசைக்க முடியாத சொத்தாக உள்ளது. அவர்கள் எங்களுக்கு பின்னால் உறுதியுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். எனவே அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பதவி ஏற்றுள்ள கவர்னர் போன்ற அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் நிர்வாகத்தை மேற்கொள்ளும்போது கண்ணியத்துடனும், தேவையற்ற அச்சுறுத்தல்களை செய்யாமலும் நடந்துகொள்ள வேண்டும்.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடருவதில் நீங்கள் கூறியுள்ள கருத்துக்கும் சேர்த்து பதில் அளிக்க விரும்புகிறேன். உங்களுக்கு 1-6-2023 அன்று எழுதிய கடிதத்தில், விசாரணையை எதிர்கொள்ளும் ஒருவருக்கும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட ஒருவருக்கும், கோர்ட்டினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான வித்தியாசங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
கோர்ட்டினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்குத்தான் அமைச்சர் பதவி அல்லது மக்கள் பிரதிநிதி என்ற பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்ய முடியும். இதை லில்லி தாமஸ் வழக்கில் 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தெளிவுப்படுத்தி உள்ளது.
நீங்கள் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள கருத்தில் சில கருத்துகளை தேர்ந்தெடுத்து கூறியிருப்பதால், அதுபோலவே லில்லி தாமஸ் வழக்கில் இருந்தும் உங்களுக்கு குறிப்பிட்ட கருத்தை எடுத்து கூற விரும்புகிறேன்.
அதில் கூறியுள்ளபடி, தகுதி இழப்பு என்பது கோர்ட்டினால் தண்டனை விதிக்கப்பட்டப்பிறகே நிகழ்கிறதாக உள்ளது. ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை அவரை கைது செய்திருக்கிறதே தவிர, அவர் மீது இன்னும் குற்றபத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. அதுபோல, குற்ற வழக்குகளை எதிர்கொண்டு வரும் நபர்களின் அமைச்சர் பதவி தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு, 2014-ம் ஆண்டு மனோஜ் நருல்லா வழக்கில் பிறப்பித்த உத்தரவையும் சுட்டிக்காட்டுகிறேன். அதில், குற்ற வழக்கை எதிர்கொள்ளும் ஒருவர் அமைச்சரவையில் இருக்க வேண்டுமா? அல்லது நீக்கப்பட வேண்டுமா? என்பது பிரதமரோ அல்லது முதல்-அமைச்சரோ முடிவு செய்ய வேண்டிய விஷயமாக உள்ளது என்று கூறியிருக்கிறது.
எனவே ஒரு விசாரணை முகமை ஒருவர் மீது ஒரு வழக்கை தொடர்ந்திருப்பதால் மட்டுமே அவர் சட்டப்படி அமைச்சராக தொடர முடியாது என்று கூறிவிட முடியாது. 16-5-23 அன்று செந்தில் பாலாஜி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கூறிய கருத்தை உங்களுக்கு நான் ஏற்கனவே விளக்கமாக கூறியிருக்கிறேன். அது குற்றத்தை கண்டறிந்து முடிவெடுத்து அளிக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. எனவே அது செந்தில் பாலாஜியை தகுதி இழக்கச்செய்வதற்கான உத்தரவாக ஏற்றுக்கொள்ள முடியாது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையின்போது, சிலர் தாக்கியதாக கூறப்பட்டுள்ள சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோர்ட்டிலும், விசாரணை அதிகாரிகளிடமும் உள்ள அந்த விவகாரத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நீங்கள் எழுப்புவது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதுபோல் உள்ளது. மேலும் நீங்கள் இதுதொடர்பான விசாரணையில் செந்தில் பாலாஜி தலையிட்டிருப்பதாக கூறும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் 5 பக்க கடிதம் எழுதியிருக்கும் நீங்கள், முந்தைய அ.தி.மு.க. அரசின் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் செய்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை அனுமதியை அளிக்கும்படி எனது அரசு வைத்துள்ள கோரிக்கைளை கிடப்பில் போட்டு, விளக்கமுடியாத மவுனத்தில் இருக்கிறீர்கள். பல மாதங்கள் அந்த கோரிக்கைகள் கிடப்பில் உள்ளன.
குற்ற வழக்கில் நடவடிக்கைகளுக்கு அனுமதி கேட்டு சி.பி.ஐ. வைத்த கோரிக்கை மீது கூட எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபோன்ற பாரபட்ச நடவடிக்கைகள், உங்களது ஆரோக்கியமற்ற ஒருதலைபட்ச செயல்பாட்டை வெளிக்காட்டுவதோடு மட்டுமல்ல, நீங்கள் மேற்கொண்டுள்ள இரட்டை நடவடிக்கையின் பின்னால் இருக்கும் உள்நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.
நான் வரம்பு கடந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாக என் மீது குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். தமிழக அரசு எப்போதுமே உங்களுக்கும், உங்கள் அலுவலகத்துக்கும் உள்ள மரியாதையை தந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் கலாசாரம் கற்றுக்கொடுத்த அந்த மரியாதையை நாங்கள் எப்போதுமே வழங்கிக்கொண்டிருக்கிறோம். அதனால் உங்களால் எங்களுக்கு அளிக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளுக்கு நாங்கள் பணிவதாக நினைத்துவிடக்கூடாது. எனவே மீண்டும் நான் வலியுறுத்துவது என்னவென்றால், அரசியல் சாசனத்தின் 164 (1) பிரிவின்படி ஒரு அமைச்சரை நியமிக்கவோ அல்லது நீக்கவோ முதல்-அமைச்சரின் ஆலோசனைப்படிதான் கவர்னர் செயல்படமுடியும்.
அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்க வேண்டும்? யார் நீக்கப்பட வேண்டும்? என்பதை முடிவு செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அது முழுக்க, முழுக்க முதல்-அமைச்சரின் தனிப்பட்ட சிறப்பு உரிமையாக உள்ளது. அரசியல் சாசனம் 164 (2) -ன்படி முதல்-அமைச்சரும், அமைச்சரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ 'டிஸ்மிஸ்' செய்யவேண்டும் என்று உத்தரவிடுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது, முழுக்க, முழுக்க தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரின் சிறப்பு உரிமையாகும். எனவே எனது ஆலோசனை இல்லாமல், செந்தில் பாலாஜியை 'டிஸ்மிஸ்' செய்ததாக நீங்கள் அளித்துள்ள அரசியல் சாசனத்துக்கு எதிரான தகவல், சட்டப்படி செல்லாததாகவும், புறக்கணிக்கத்தக்கதாகவுமே உள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா நடந்தது.
- இதில் அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடி ஏற்றி வைத்தார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று சுதந்திர தின விழா நடந்தது. இதில் அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நீட் தேர்வு குறித்து ஆளுநர் வரம்பு மீறி பேசுகிறார். சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவை, ஒருமுறைக்கு இருமுறை அனுப்பியும், ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பதற்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் அவர் கைது செய்யப்படலாம். இதற்கு மாநில அரசுக்கு உரிமை உள்ளது.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சி.பி.ஐ. அதிகாரியை கைதுசெய்து, போலீஸ் நிலையத்தில் அமர வைத்தாரா இல்லையா?
ஆளுநரின் பேச்சும் செயலும் தவறானது. எங்கள் கூட்டணி கட்சிகள், அவரது தேநீர் விருந்துக்கு வரமாட்டோம் எனக் கூறினோம். அவர் மழையே பெய்யாத போதும், மழை காரணமாக தேநீர் விருந்தை தள்ளி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார் என தெரிவித்தார்.
- ஆளுநர் ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.
- உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணை.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, நேற்று சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் ரவி தீடிரென டெல்லி புறப்படுகிறார்.
அதன்படி, இன்று மாலை 5.15 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். ஆளுநர் ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழக அரசு வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
- கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர், கவர்னரிடையே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. எனவே முதலமைச்சரை கவர்னர் அழைத்து பேசி இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்தால் இந்த நீதிமன்றம் வெகுவாக பாராட்டும் என்று நீதிபதிகள் கருத்து வெளியிட்டனர்.
அதன்பிறகு தமிழக அரசு வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.

இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மாலை 5மணியளவில் சந்தித்து பேசினார்.
அப்போது தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் பற்றி கவர்னர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.
குறிப்பிட்ட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதால் மக்கள் நல பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.






