உள்ளூர் செய்திகள்
.

சூறாவளி காற்றில் 6 மின்கம்பங்கள் சேதம்

Published On 2022-04-12 09:23 GMT   |   Update On 2022-04-12 09:23 GMT
தலைவாசல் அருகே சூறாவளி காற்றில் 6 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.
தலைவாசல்:

தலைவாசல், சார்வாய், சார்வாய்புதூர், மணிவிழுந்தான், தேவியாக்குறிச்சி, காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. 

இந்த சூறாவளி காற்றில் சார்வாய் புதூர் பகுதியில் 6 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதில் சக்தி என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்தது. 

அவருக்கு சொந்தமான வாழை, மா மரங்கள் காற்றில் சாய்ந்தன. விவசாயி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கோழிகள், கோழிக்குஞ்சுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. 

மின்கம்பங்கள் சாய்ந்ததால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தலைவாசல் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு புதிய மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு கொடுத்தனர்.

Tags:    

Similar News