உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஈஸ்டர் பண்டிகையால் குறைந்த கறிக்கோழி விற்பனை

Published On 2022-04-11 07:12 GMT   |   Update On 2022-04-11 07:12 GMT
சில பண்டிகைகளின்போதும் கறிக்கோழி நுகர்வு குறைவது வழக்கம்.
பல்லடம்:

திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கோழிகளின் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. ஈஸ்டர் பண்டிகை காரணமாக, கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது.

இது குறித்து உற்பத்தியாளர்கள் கூறுகையில்:

ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசன், ஜூன் மாத துவக்கம், ஈஸ்டர், ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட சில பண்டிகைகளின்போதும் கறிக்கோழி நுகர்வு குறைவது வழக்கம். ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர்.

கேரளாவில் கறிக்கோழி நுகர்வோர் எண்ணிக்கை 20, 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. கறிக்கோழி விற்பனை பாதிக்கப்பட்ட போதும், தமிழக அரசின் மீன்பிடி தடை காரணமாக மீன் வரத்து குறைந்துள்ளது. இது கறிக்கோழிகளின் விற்பனையை ஈடு செய்கிறது. வரும், 15-ந் தேதிக்கு பிறகு விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.
Tags:    

Similar News