உள்ளூர் செய்திகள்
.

குடிநீர் கட்டணத்தை குறைத்து பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-04-08 11:20 GMT   |   Update On 2022-04-08 11:20 GMT
அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் ரூ.50 குறைத்து முதல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம்,

சேலம் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி முதல் கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பாபு என்ற செல்வராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வசூர்யா, செயல்அலுவலர் பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 கூட்டத்தில் உ ள்ளாட்சி தேர்தல்  வெற்றிக்கு காரணமாக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் குடிநீர்கட்டணம் ரூ.50 குறைப்பு, அயோத்தியாப்பட்டணம் ரெயில்வே பிரிவு ரோட்டில் பொது கழிப்பறை அமைப்பது, சீரான குடிநீர் வழங்குவது, தேவையான அனைத்து இடங்களிலும்  தெருவிளக்கு அமைப்பது,  சாக்கடை கால்வாய்களை சீரமைப்பது, ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பது என்பது உள்பட பல்வேறு  தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இதில் கவுன்சிலர்கள் தமிழ்செல்வி, சரவணன், தேவன், மணியம்மாள், ராணி, பிரேமகுமாரி, தீனதயாளன், புஷ்பவள்ளி, அசோக், புவனேஸ்வரி, மகாலெட்சுமி, மணி, திருமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News