உள்ளூர் செய்திகள்
மெரினா கடற்கரை

மெரினா கலங்கரை விளக்கம் அருகே 70 மீன் கடைகள் அகற்றம்

Published On 2022-04-04 06:50 GMT   |   Update On 2022-04-04 06:50 GMT
மெரினா கடற்கரை லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 70-க்கும் மேற்பட்ட மீன் கடைகளை போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள்.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள லூப் சாலையில் மீன் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த பகுதியில் கார்களில் வந்து மீன் வாங்க வருபவர்கள் கார்களை சாலைகளில் நிறுத்தினார்கள். இதன் காரணமாக அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக மெரினா கடற்கரை லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 70-க்கும் மேற்பட்ட மீன் கடைகளை போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள்.

புதிய மீன் மார்க்கெட் கட்டப்பட உள்ளதாக கூறி இந்த சாலையை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே கூறி அறிவுறுத்தியது. ஆனால் வியாபாரிகள் வெளியேற மறுத்த நிலையில் 70 கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்தபடி மீன் மார்க்கெட் ஒதுக்க தவறிய நிலையில் நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள சாலையில் மீன் கடைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags:    

Similar News