உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் பிறந்த 14 குழந்தைகள்

Published On 2022-03-09 08:26 GMT   |   Update On 2022-03-09 08:26 GMT
ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அதன்படி 10 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
உடுமலை:

உடுமலை வ.உ.சி., வீதியில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது.

இம்மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நோயாளிகள் வருகையும், குழந்தை பிறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. 

அவ்வகையில், சராசரியாக தினமும் 5 முதல் 7 குழந்தைகள் வரை பிறக்கின்றன. இந்நிலையில் கடந்த, 4-ந் தேதி 14 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:-

மருத்துவமனையில் அன்றைய தினம் 14 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் மேற்கொள்ளப்பட்டது. ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அதன்படி 10 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்த பிரசவத்தின் போது 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மீதமுள்ள 4 பேருக்கு மிகவும் சிரமமான சூழ்நிலையில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களின் தீவிர முயற்சியால், நலமுடன் குழந்தைகள் பிறந்தன. 

இவர்களை, கலெக்டர் வீனீத், மருத்துவப்பணிகள் துறை உயரதிகாரிகள் ஆகியோர் வாழ்த்தினர். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News