உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பணியின் போது செல்போனை தவிர்க்க வேண்டும் - அதிகாரிகள் அறிவுறுத்தல்

Published On 2022-03-08 10:22 GMT   |   Update On 2022-03-08 10:22 GMT
நிறுவனத்தின் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து பாதுகாப்பு அலுவலர் ஆனந்தகிருஷ்ணன் பேசினார்.
உடுமலை:

உடுமலை அருகே பூலாங்கிணறில் தேசிய பாதுகாப்பு தின விழா கொண்டாடப்பட்டது. பூலாங்கிணறு தனியார்மில் நிறுவனத்தில் நடந்த விழாவில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் புகழேந்தி, உதவி இயக்குனர் பிரேம்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நிறுவன பொதுமேலாளர் துரைபாபு முன்னிலை வகித்தார். விழாவையொட்டி அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

நிறுவனத்தின் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து பாதுகாப்பு அலுவலர் ஆனந்தகிருஷ்ணன் பேசினார். தொடர்ந்து ஆரோக்கியமாக பணிபுரிய, குறைந்தபட்சம் 8 மணி நேரம் உறக்கம் வேண்டும். எண்ணம், செயல், சிந்தனை, அனைத்தும் நிகழ்காலத்தில் இருத்தல் வேண்டும். 

பணியின்போது செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு குறித்து கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டிருந்த நிலையில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News