உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

காப்பீடு திட்டம் - வருமான உச்சவரம்பு உயர்வு

Published On 2022-01-26 05:14 GMT   |   Update On 2022-01-26 05:14 GMT
காப்பீடு திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
திருப்பூர்:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்த பயனாளிகள் குடும்பத்துக்கு ஒரு லட்சம் வரை இலவச சிகிச்சை பெற காப்பீடு செய்யப்பட்டது. 

இத்திட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட்டனர். பல்வேறு தரப்பினர் கோரிக்கையை ஏற்று  குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்பீடு திட்டத்தில் இணைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என திருப்பூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News