வாக்காளர் தினம் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
பதிவு: ஜனவரி 25, 2022 16:47 IST
மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் உறுதிமொழி ஏற்ற பணியாளர்கள்.
திருப்பூர்:
வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 25--ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று வாக்காளர் தினம் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்குப்பதிவு, நேர்மையான முறையில் வாக்களிக்கத் வேண்டுதல் மற்றும் தேர்தலின் முக்கியத்துவம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த வாக்காளர் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :