உள்ளூர் செய்திகள்
நகை பறிப்பு

தண்டையார்பேட்டையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Update: 2022-01-25 10:34 GMT
தண்டையார்பேட்டையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி யோகேஷ்வரி. நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சி கலந்து கொள்ள நடந்து சென்று கொண்டு இருந்தனர். கோதண்டராமன் தெரு அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென யோகேஷ்வரி அணிந்து இருந்த 4 பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News