உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விளைச்சல் காரணமாக வரத்து அதிகரிப்பு-பாளை உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை

Published On 2022-01-24 10:54 GMT   |   Update On 2022-01-24 10:54 GMT
வரத்து அதிகரித்ததன் காரணமாக பாளை உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.20-க்கு விற்கப்பட்டது.
நெல்லை:

வடகிழக்கு பருவமழையையொட்டி கடந்த நவம்பர் மாதம் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.140 வரை விற்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பண்ணை பசுமை காய்கறி கடைகளில் தக்காளி விலை விற்க அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் மழை படிப்படியாக குறைந்ததையடுத்து விளைச்சல் பாதிப்பு குறைந்து சந்தைகளுக்கு வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் நெல்லை, பாளை மார்க்கெட்டுகளுக்கு மூட்டை மூட்டையாக தக்காளிகள் வரத்தொடங்கி உள்ளது. 

இதனால் தக்காளியின் விலை குறைய தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் பாளை உழவர்சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.28 க்கு விற்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று விலை மேலும் குறைந்து ரூ.20-க்கு விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் இன்று பெரும் அளவு குறைந்தது.

வெள்ளை கத்தரிக்காய் ரூ.36-க்கும், கலர்கத்தரிக்காய் ரூ.24-க்கும், வெண்டைக்காய், புடலங்காய் ரூ.20-க்கும், அவரை ரூ.36&க்கும், சுரைக்காய் ரூ.10-க்கும், அவரை, பல்லாரி ரூ.36-க்கும், சாம்பார் வெள்ளரி ரூ.10-க்கும், 
கேரட் ரூ.35-க்கும், முட்டை கோஸ் ரூ.45-க்கும், பீட்ரூட் ரூ.35-க்கும், காலிபிளவர் 
ரூ.28-க்கும் விற்பனையானது.
Tags:    

Similar News