சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சேலத்தில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
பதிவு: ஜனவரி 24, 2022 15:34 IST
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர்
சேலம்:
அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலையை கண்டித்து சேலத்தில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பட்டத்திற்கு கோட்ட செயலாளர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கோபிநாத், மாநகர் மாவட்ட பொறுப் பாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர்புற வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மகளிரணி சுமதி, பூபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.