உள்ளூர் செய்திகள்
.

சேலம் தாதகாப்பட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

Update: 2022-01-24 09:30 GMT
சேலம் தாதகாப்பட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அன்னதானப்பட்டி:

சேலம் தாதகாப்பட்டி கேட்  மூணாங்கரடு   பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதன் பேரில் இன்ஸ் பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார்  அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

இதில் மூணாங்கரடு பாரதி நகர் மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர். சிலை அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த  மேட்டுப்பட்டி தாதனூர் வீராணம் மேல்தெரு பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (வயது 20)  என்பவரை போலீசார்  கைது செய்தனர். 

அவரிடமிருந்து ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள  1.100 கிலோ கிராம்  எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதுகுறித்து தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News