உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் நாளை மறுநாள் மின்தடை

Update: 2022-01-23 05:56 GMT
நெல்லை சந்திப்பு, டவுன் மற்றும் பழைய பேட்டை பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நெல்லை

நெல்லை நகர்புற மின் விநியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

நெல்லை கொக்கிரகுளம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, இளங்கோநகர், பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சர்ஜென்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளை புதுப்பேட்டை தெரு மற்றும் சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல் பழையபேட்டை, பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் வருகிற 25-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு நடப்பதால் டவுன் ரதவீதிகள், காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, டவுன், பாட்டப்பத்து, அபிசேகப்பட்டி, குறுக்குத்துறை, கருப்பன்துறை, சாமி சன்னதி தெரு , நயினார்குளம், சத்தியமூர்த்தி தெரு, வையாபுரி நகர், சிவன்கோவில் தெற்கு தெரு, ராம்நகர், ஊருடையான்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News